மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த மாதம் தனது விண்டோஸ் 8யும் மற்றும் விண்டோஸ் போன் 8யும் இந்த மாதம் களம் இறக்க இருக்கிறது. இந்த நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.
அதாவது வரும் அக்டோபர் 25ல் விண்டோஸ் 8, அதனைத் தொடர்ந்து அக்டோபர் 29ல் சர்பேஸ் விண்டோஸ் 8 போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிகழ்விற்கான அழைப்பிதழ்களை பலருக்கும் மைக்ரோசாப்ட் அனுப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த விண்டோஸ் 8 அறிமுகம் செய்யப்பட்ட உடன் நிறைய மொபைல் நிறுவனங்கள் தங்கள் புதிய விண்டோஸ் 8 சாதனங்களைக் களமிறக்கத் தயாராக இருக்கின்றன. குறிப்பாக நோக்கியா, சாம்சங் மற்றும் எச்டிசி போன்ற நிறுவனங்கள் வரும் நவம்பரில் தங்கள் விண்டோஸ் 8 போன்களைக் களமிறக்க இருக்கின்றன.
மேலும் இந்த விண்டோஸ் 8 வந்த பின்புதான் தங்களின் புதிய விண்டோஸ் 8 சாதனங்களின் விலைப் பட்டியல்களை வெளியிட இருக்கின்றன. ஆகவே இந்த விண்டோஸ் 8 இயங்கு தளம் கணினி சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.