இன்று மனநல ஆரோக்கிய தினம் என அறிய முடிகிறது



மன அழுத்தம் - முழு உலகமும் எதிர்கொள்கின்ற ஒரு நெருக்கடி, என்பதை கருப்பொருளாக வைத்திருக்கிறார்கள்.

இதைப் பார்த்தவுடன் சில அல் குர்ஆன் வசனங்கள் நினைவுக்கு வந்தது


"எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம் - 20:124"

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அல் Ghஹினா Ghஹினன் நப்ஸ் (சீமான் தனம் என்பது, உள்ளத்துடைய [ஆன்மாவுடைய] சீமான் தனம் தான்)"

அல்லாஹ், மனிதனைப் படைத்து சில வரையரைகளை வைத்து வாழச் சொல்லியிருக்கிறான், இதனை நாங்கள் சரீஅத் என்று சொல்வோம். முதலில் எதுவெல்லாம் படைத்த இறைவனால் தடுக்கப்பட்டிருக்கின்றதோ, சந்தேகமில்லாமல் அதில் எந்த நலவும் இல்லை என்ற ஈமான் உள்ளத்தில் இருக்க வேண்டும், அப்பொழுதுதான் அதனை நாங்கள் செய்யாமல் இருக்க முடியும். ஆனால் மேற்கத்தியம் இன்று ஆன்மாவை புறக்கனித்துவிட்டதனால், ஈமானை இழந்துவிட்டதனால் அதன் விளைவை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தான் இந்த மன அழுத்தம்.

அல்லாஹ், உலகத்துல இன்பங்களைப் படைத்து ஒரு அழகிய வரையறையை வைத்திருக்கிறான். ஏனென்றால் ஒரு நிலைமைக்கு (கட்டத்திற்கு) அப்பால், மனிதனுக்கு இன்பத்தை அனுபவிக்க முடியாது, அவன் மனநோயாளியாகிவிடுவான். வாழ்க்கை சலிப்படைந்துவிடும்.

ஆனால் மேற்க்குலகைப் பொறுத்தவரை இந்த எந்த வரையறைகளும் கிடையாது. மிருகங்களைப் போல் நினைத்த மாதிரி வாழலாம், இன்பம் அனுபவிக்கலாம். ஒரு எல்லைக்கு அப்பால் இன்பம் அனுபவித்துவிடுவார்கள் என்றிருந்தால், அதற்கு அப்பால் அவருக்கு அனுபவிக்க ஒன்றும் கிடையாது. இப்பொழுது அமைதி தேவைப்படும், கிடைக்காது. தூக்கம் வராது, தூக்க மாத்திரை தேவைப்படும். உலகில் அதிகம் தூக்க மாத்திரை பாவிப்பவர்கள், அமெரிக்கர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

தற்கொலையில் முன்னிலை வகிப்பது, தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் அதே ஜப்பான் தான். ஜப்பானில் ஜன்னல்கள் வைத்து ஆடம்பர ஹோட்டல்கள் கட்டமாட்டார்களாம்; ஏனென்றால்; அவர்கள் தற்கொலை செய்வதற்காக ஜன்னனில் இருந்து குதிக்க முடியும் என்பதற்காக. என்ன குறைச்சல்? ஒன்றும் இல்ல; ஈமான் கிடையாது.

இரண்டாவது இன்றைக்கு மனிதன் எதிர்கொள்கின்ற பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினை (உண்மையில் இது ஒரு பிரச்சினையே இல்லை)

பல கோடிக்கு அதிபதியாக இருக்கலாம்; ஆனால் அல் குர்ஆனின் கருத்துப்படி, அந்தக் கோடீஸ்வரர் இன்னும் தனக்கு செல்வம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பாரானால் அவரையும் நாங்கள் மிஸ்கீன் (தேவையுடையவர்) என்று தான் சொல்வோம்.

"அல் Ghஹினா Ghஹினன் நப்ஸ் (சீமான் தனம் என்பது, உள்ளத்துடைய [ஆன்மாவுடைய] சீமான் தனம் தான்)"

பணம் கிடையாது; இருக்க சரியான இடமும் இல்ல; ஆனா இமான் இருக்குது; அல்ஹம்துலில்லாஹ் என்று நிலைமைகளைப் பொருந்திக் கொள்ளக்கூடிய உள்ளம் இருக்கின்றதா? இவருக்கு நிம்மதியாக தூக்கம் போகும்;

"ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம் - 16:97"

நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். - 62:10
 

நண்றி-Nezaad Bro