காதல் எனும் கடலில் முத்தெடுக்கும் சிலர்
என்னைப்போல் தத்தளிக்கும் சிலர் #கவித
#ஆத்தா நான் லவ் பெய்லியர் ஆகிட்டன்
அரியர் வெச்சா வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி மாதிரி ஒரு பொண்ணு செட் ஆகும். நல்லா படிச்சா காதல் கொண்டேன் தனுஷ் நிலைமைதான். அதனால, சுமாரா படி.., சூப்பர் ஃபிகர் பிடி #exam#semester #studyLeave
எப்படி மூங்கிலில் இருந்து வரும் காற்று இசையாகிறதோ அதேபோன்று என் சிந்தனயில் இருந்துவரும் வார்த்தைகள் மொக்கையாகி விடுகின்றன
Rz Omar
இலங்கையில் சில இனவாத சக்திகள் எமது முஸ்லிம் இளைஞர்களை இனவாதத்தினால் துண்டிவிட்டு அவர்களை ஆயுத கலாச்சாரத்தினுள் தள்ளிவிட்டு தீவிரவாத பட்டம் வழங்க முனையும் இந்த வேளையில் எகிப்த்தின் உறவுகளிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளும் பாடம் அவர்களது சாத்வீக போராட்டமே.
Rz Omar
Rz Omar
Rz Omar
முக்கியத்துவம் கூடிய விடயங்களுக்கு குறைந்த முக்கியத்துவமும், ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் குறைந்த விடயங்களுக்கு கூடிய முக்கியத்துவமும் கொடுக்கின்றோம்.
பள்ளிவாசல் தொடர்பாக யாரும் தவறாக பேசினால், மிகவும் வேதனைப்படுகிறோம். ஆனால், அல்லாஹ்வை நினைவுபடுத்தக்கூடிய பள்ளியுடன் நாம் எவ்வளவு தொடர்பாக இருக்கிறோம் என்பதை பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. எமது சுபஹு தொழுகையுடைய நிலை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.
ஹலால் சின்னம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள சிரமப்படுகிறோம். வட்டி, சீதனம், அடகு, கடமையான ஸகாத்தை நிறைவேற்றாமல் சேர்க்கப்பட்ட பணம், ஊதியத்துக்கு குறைந்த வேலை பார்த்து பெறப்பட்ட சம்பளம், இவைகளை சீர்தூக்கிப்பார்த்து இதிலுள்ள ஹராம்களை பற்றி நாம் பெரிதாக வருந்துவதாக இல்லை.
பேசச் சொன்னால், அல்-குர்ஆன் பேசுகின்ற பெரும் பெரும் சிந்தனைகளை பேசுகின்றோம். அல்-குர்ஆனை கொடுத்து கொஞ்சம் இதனை தஜ்வீத் முறைப்படி ஓதுங்கள் என்றால், கூனிக்குறுகி விடுகிறோம்.
நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக யாரும் பேசினால் மிகவுமே கோபப்படுகிறோம். அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை எம்மிடம் இல்லாததை எண்ணி நாம் எம்மையே கோபப்படுவதில்லை.
இமாம் அபூஹனீபா அவர்களுடைய வீட்டுக்குப்பக்கத்திலே வசித்துவந்த ஒரு யூதர், அவருடைய வீட்டை விற்கும் போது பெரும் விலையைக் கூறினார். பெரும் விலையை இந்த வீட்டுக்கு சொல்கின்றீர்கள் என்று யாரும் கேட்டால், இந்த வீட்டின் பெறுமதி குறைவுதான் ஆனால் இமாம் அபூஹனீபாவை அயல் வீட்டுக்காரராக பெறுவதென்றால் நீங்கள் இந்த வீட்டைத் தான் வாங்க வேண்டும் என்று சொல்வார் (ஆதாரபூர்வமான தகவலா என்பது பற்றி தெரியவில்லை)
மேலும்,
இப்ன் அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், "பாவத்தினுடைய ஒரு இயல்பு தான் அடுத்த மனிதர்களின் உள்ளங்களில் அது எம்மீதான வெறுப்பை உண்டு பண்ணும்"
எனவே எமது தனிப்பட்ட வாழ்க்கையை நாம் சுயவிசாரணை செய்துகொள்வது தான் எமது முதன்மையான தேவையாக இருக்கின்றது. அது சீராகிவிட்டால், அல்லாஹ்வுடைய உதவியை பெறுவதற்கு தகுதியானவர்களாக நாம் மாறிவிடுவோம்.
அல்லாஹ் எமது எண்ணங்களை பொருந்திக் கொள்வானாக. காற்றை பொதுவாக்கியது போல், ஹிதாயத்தையும் எல்லோருக்கும் பொதுவாக்குவானாக!
Rz Omar
அன்னிய மக்கலுக்கு முஸ்லிம்களின் மீது ஏற்பட்டிருக்கும் வெறுப்பே, முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் பரவுவதற்கான முக்கிய காரணமாகும்.இன்று சில முஸ்லிம்களுக்கு பொது இடங்களில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் தெரியாது.பஸ்ஸில் ஏறினாள் வாசலைப் பிடித்து நின்று கொள்வார்கள், பஸ்ஸில் ஏருபவர்களுக்கும் இறங்குபவர்களுக்கும் இது இடைஞ்சலாக இருக்கும். பஸ் நடத்துனர்கள் ஏசினால் அவர்களை முறைத்துப் பார்ப்பார்கள்.
சீட்டில் உட்காந்தாள் ஒரு கால் சீட்டுக்கு வெளியே, மற்றவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கும்.
பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
ஒரு சிறிய டிக்கட் தொகைக்கு பெரிய தாளை நீட்டுவார்கள்.
அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிக்குள் சத்தம் போட்டு போனில் பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் எத்தனையோ கூடாத விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கூடாது என்றால் அது ஹராம்.
இதில் பிரச்சினை என்னவென்றால்:
இந்த ஹராம்களை செய்பவர் ஒரு சராசரி தொற்றமுள்ளவரக இருந்தால் அதனைப் பார்க்கும் அன்னிய மக்கள் வெறுப்பது அந்த மனிதனை.
அதே போன்று இந்த ஹராம்களை செய்பவர் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் தோற்றத்தில் இருந்தால் அவர்கள் வெறுப்பது முஸ்லிம்களை. இது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் அனால் இதுதான் உண்மை.
தான் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று படக்கூடிய ஆடைகள் அணியும் முன், தான் அதற்குத் தகுதியானவனா என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் சாதரணமாக ஆடை அணியக்கூடிய ஒரு முஸ்லிமை விட முஸ்லிம் என்று ஆடையில் காட்டிக் கொள்ளும் ஒருவர் ஹராத்தை செய்தால் அது அந்நியர்கள் மத்தியில் மிக விரைவாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏட்படத்தும்.
இவைகள் தான் இன்றைய குத்பாகளில் தெளிவு படுத்தப் பட வேண்டிய விடயங்கள். இவைகள் தான் இன்றைய உலமாக்களின் முக்கிய பொறுப்பு.
சீட்டில் உட்காந்தாள் ஒரு கால் சீட்டுக்கு வெளியே, மற்றவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கும்.
பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
ஒரு சிறிய டிக்கட் தொகைக்கு பெரிய தாளை நீட்டுவார்கள்.
அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிக்குள் சத்தம் போட்டு போனில் பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் எத்தனையோ கூடாத விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கூடாது என்றால் அது ஹராம்.
இதில் பிரச்சினை என்னவென்றால்:இந்த ஹராம்களை செய்பவர் ஒரு சராசரி தொற்றமுள்ளவரக இருந்தால் அதனைப் பார்க்கும் அன்னிய மக்கள் வெறுப்பது அந்த மனிதனை.
அதே போன்று இந்த ஹராம்களை செய்பவர் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் தோற்றத்தில் இருந்தால் அவர்கள் வெறுப்பது முஸ்லிம்களை. இது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் அனால் இதுதான் உண்மை.
தான் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று படக்கூடிய ஆடைகள் அணியும் முன், தான் அதற்குத் தகுதியானவனா என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் சாதரணமாக ஆடை அணியக்கூடிய ஒரு முஸ்லிமை விட முஸ்லிம் என்று ஆடையில் காட்டிக் கொள்ளும் ஒருவர் ஹராத்தை செய்தால் அது அந்நியர்கள் மத்தியில் மிக விரைவாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏட்படத்தும்.
இவைகள் தான் இன்றைய குத்பாகளில் தெளிவு படுத்தப் பட வேண்டிய விடயங்கள். இவைகள் தான் இன்றைய உலமாக்களின் முக்கிய பொறுப்பு.
சீட்டில் உட்காந்தாள் ஒரு கால் சீட்டுக்கு வெளியே, மற்றவர்களுக்கு இது இடைஞ்சலாக இருக்கும்.
பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு போனில் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள் அல்லது பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும்.
ஒரு சிறிய டிக்கட் தொகைக்கு பெரிய தாளை நீட்டுவார்கள்.
அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கும் வங்கிக்குள் சத்தம் போட்டு போனில் பிசினஸ் பேசிக் கொண்டிருப்பார்கள்.
இன்னும் எத்தனையோ கூடாத விடயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். கூடாது என்றால் அது ஹராம்.
இதில் பிரச்சினை என்னவென்றால்:இந்த ஹராம்களை செய்பவர் ஒரு சராசரி தொற்றமுள்ளவரக இருந்தால் அதனைப் பார்க்கும் அன்னிய மக்கள் வெறுப்பது அந்த மனிதனை.
அதே போன்று இந்த ஹராம்களை செய்பவர் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று காட்டிக் கொள்ளும் தோற்றத்தில் இருந்தால் அவர்கள் வெறுப்பது முஸ்லிம்களை. இது சிலருக்கு கசப்பாக இருக்கலாம் அனால் இதுதான் உண்மை.
தான் மற்றவர்கள் பார்வைக்கு 100% முஸ்லிம் என்று படக்கூடிய ஆடைகள் அணியும் முன், தான் அதற்குத் தகுதியானவனா என்பதை சிந்திக்க வேண்டும். ஏனெனில் சாதரணமாக ஆடை அணியக்கூடிய ஒரு முஸ்லிமை விட முஸ்லிம் என்று ஆடையில் காட்டிக் கொள்ளும் ஒருவர் ஹராத்தை செய்தால் அது அந்நியர்கள் மத்தியில் மிக விரைவாக முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏட்படத்தும்.
இவைகள் தான் இன்றைய குத்பாகளில் தெளிவு படுத்தப் பட வேண்டிய விடயங்கள். இவைகள் தான் இன்றைய உலமாக்களின் முக்கிய பொறுப்பு.
Rz Omar
கடந்த பல மாத காலமாக ஹலால் பிரச்சினை உச்ச கட்டத்தை அடைந்திருந்ததால் எல்லா ஊடகங்களிலும் சிங்கள முஸ்லிம் தரப்புகளை பற்றியே வாத பிரதிவாதங்கள் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நாட்டில் வாழும் மற்றுமொரு முக்கிய இனமான தமிழ் மக்கள் ஹலால் தொடர்பாக எத்தகைய ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் அல்லது முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பாக அவர்களின் மன நிலை எப்படி இருக்கிறது என்பதனையும் நாம் காலத்தின் தேவை கருதி அவதானிக்க வேண்டியிருக்கின்றது.
என்னோடு குறிப்பிட்ட காலம் இலங்கையில் ஒன்றாக படித்த தமிழ் சகோதரர் ஒருவர் தனது FACE BOOK பக்கத்தில் ஒரு கருத்தை இவ்வாறு வெளியிட்டிருந்தார். அதை உங்கள் சிந்தனைக்கு அப்படியே தருகிறேன்.
கல்விக்காக எம்மை...வியாபாரத்துக்காக உங்களை...தம்பிகளா..தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்...பக்கத்து வீட்டில் செத்த வீடு நடக்கும்போது..நீங்கள் படலைகளை சாத்தியிருந்தால் கூட பரவாயில்லை..குத்தாட்டமல்லவா போட்டீர்கள்...அப்போது நீங்கள் தூக்கிவிட்டிருந்தால் இன்றும் நாளையும் உங்களுக்கு தோள்கொடுக்க நாம் இருந்திருப்போம்...நீங்கள் தான் சேர்ந்துகொண்டு எமை கொண்டுவிட்டீர்களே....இங்கே இன்று நாமோ ஊமைகள்...நாம் உமக்கெப்படி உதவ...
இது தான் எமது சகோதர தமிழ் மக்களின் அமைதியான நிலைப்பாடு
அந்த சகோதரரின் சிந்தனைக்காகவும், நமது மக்களுக்கு நமது நிலைப்பாட்டை தெளிவு படுத்துவதற்காகவும், உங்கள் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தமிழ் சகோதரர் , நாளை இப்படியான ஒரு விமர்சனத்தை உங்கள் முன் வைத்தால், நீங்கள் எவ்வாறு பதில் அளிக்கவேண்டும் என்பதற்காகவும் இதனை பதிவு செய்கிறேன்.
நண்பர்களே!!! முஸ்லிம் மக்களாகிய நாம் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினையை காலத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவாக பிரித்து நோக்கவேண்டிய ஒரு தேவையை, நாங்கள் விரும்பாமலே விடுதலை புலிகள் எங்கள் மீது திணித்தார்கள். அது தான் கி.மு கி.பி , மாதிரி 90 க்கு முன் 90 க்கு பின் என்ற நிலைப்பாடு.
90 க்கு முற்பட்ட காலத்தை பொருத்தவரைக்கும் முஸ்லிம்கள் கல்வியில் மிகவுமே பின்தங்கிய நிலையில் காணப்பட்டார்கள். எந்த ஒரு உயர் காரியாலயத்துக்கு சென்றாலும் முஸ்லிம் நபர் ஒருவரை பார்ப்பது மிகவும் அபூர்வமானதாகவே இருந்தது. அரசியல் ரீதியாகவும் ஒரு நலிவடைந்த நிலையிலேயே காணப்பட்டார்கள். 80 களின் பின் பகுதிகளிலேயே முஸ்லிம் கட்சிகள் கூட தோன்ற ஆரம்பித்தன. அதுவரைக்கும் தமிழ் மக்களின் அரசியலின் பின்னாலேயே முஸ்லிம்கள் இருந்தனர். பொருளாதாரத்தை பொறுத்த வரைக்கும் வடகிழக்குக்கு உள்ளேயும் வெளியேயும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்பட்டன.

இப்படி 90 க்கு முற்பட்ட காலத்தில் முஸ்லிம்கள் கல்வி, அரசியல், பொருளாதாரம் என்ற எல்லா படி நிலைகளிலும் தமிழ் சமூகத்தை விட பல தசாப்தங்களுக்கு பின்னோக்கிய நிலையிலேயே காணப்பட்டனர். ஒரு சமூகம் தன்னை பாதுகாத்துக்கொள்ளவும் சகோதர சமூகத்தை தூக்கி விடவும் நான் மேலே சொன்ன 3 காரணிகளும் இன்றியமையாதது. நாங்கள் உங்களை தூக்கி விடவில்லை என்று சொல்கிறீர்களே நாங்கள் வடகிழக்கில் இருந்து வெளியேற்றப்பட்டபோது எங்கள் சமூகத்தாலேயே எங்களை காப்பாற்ற முடியவில்லையே, இதற்கு அப்பால் சென்று அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் போர்க்கொடி தூக்கவில்லை என்று சொல்கிறீர்களே இது என்ன ஞாயம்??
2 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்ற அந்த பிக்கப்களில் பூட்டப்பட்ட ஒலிபெருக்கிகளின் முழக்கம் கேட்டவுடன் சிலர்கள் இறந்து போன மையித்துகளை வைத்துக்கொண்டு எப்படி அடக்கம் செய்வதென்று திகைத்துப்போய் நின்றார்கள். மரணப்படுக்கையில் இருந்த எத்தனையோ பேர் போட் இல் ஏறிய உடனே மாண்டுபோனார்கள். பிரசவ தாய்மார்களுக்கு ஆஸ்பத்திரி கட்டில் போளிதீணினால் மூடப்பட்ட படகை தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை.
அழிக்கப்பட்டோம், அலைக்கழிக்கப்பட்டோம், பள்ளி வாசலுக்குள் வெட்டப்பட்டு கிடந்தோம், கைகள் கட்டப்பட்டு வயல்களில் சுடப்பட்டு இறந்தோம், கடைகளின் சாவிகள் பறிக்கப்பட்டோம், வீட்டில் இருந்த டிவி , பிரிட்ஜ் ஐ ஏற்றிய பெடியல்களின் பிக்கப்கள் ரிவேர்ஸ் எடுப்பதற்காக கேட் ஐ திறந்து உதவி செய்தோம், கண் மூடி திறப்பதுக்குள் காணாமல் போனோம்.
90 க்கு பிறகு கூட தமிழ் மக்களை நேசித்தோம். நடந்ததுக்கும் தமிழ் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று புலிகளுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தித்தோம்.தமிழ் மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று யோசித்தோம். தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி புலிகளின் தலைமைதான் என்றார்கள். எந்த முகத்தோடு நாம் புலிகளின் முன்னாள் போவது??? உதவிக்கு வந்த தனது இன சகோதர இயக்கங்களை கூட சுட்டுக்கொன்றார்கள், செய்வது அறியாது விலகினோம். சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடுமா என்ன? தமிழ் அரசியல் வாதிகளையும் சட்ட அறிஞர்களையும் தேடி தேடி சுட்டார்கள், ஒதுங்கினோம். A9 க்குள் உங்களை அடக்கி ஆண்டார்கள் வாய் மூடி மௌனிகள் ஆனோம்.

புலிகள் எங்களுக்கு அடித்த அடியில் இருந்து நாங்கள் மீண்டெழுந்து எங்கள் பாதையையும் பார்வையையும் சரிசெய்ய முன் உங்கள் கதையை முடித்து விட்டார்கள் சகோதரனே!!! அன்று புலிகள் எங்களை விரட்டி அடிக்காமல் இருந்திருந்தால் தமிழ் மக்களின் பலம் இரட்டிப்பாக இருந்திருக்கும், செய்தார்களா? சகோதரனே !!!
அகதி முகாமில் அடித்த வெயில் எங்கள் உச்சி மண்டையில் சுர்ர்ர்ர் எண்டது சகோதரனே!!!
இன்று எம்மை பார்த்தா கேட்கிறீர்கள்??? குத்தாட்டம் போட்டீர்கள் என்று.....
இதை கேட்கும் போது எங்கள் உள்ளம் டர்ர்ர்ர்ர்..... என்குது சகோதரனே!!! டர்ர்ர்.... என்குது
ஏனெனில் அந்த படகில் இருந்த 3 வயது குழந்தை நான் சகோதரனே!!! தலை வலியும் காய்ச்சலும் எங்களுக்கும் தெரியும்!!!
MIFRAAZ SHAHEED, TIANJIN MEDICAL UNIVERSITY - CHINA
Rz Omar
இஸ்லாமிய சட்டவியலில், அறிஞர்கள் சொல்லக்கூடிய ஒரு விடயம் தான்
"அல்லாஹ் கடமையாக்கிய ஒரு விடயத்தை நிறைவேற்றுவதற்கு இன்னுமொரு காரியம் நடைபெற்றால் தான் அது சாத்தியம் என்றிருந்தால், குறிப்பிட்ட அந்த விடயமும் கடமையாக மாறும்"
அந்த அடிப்படையிலே,
சுபஹ் தொழுகையை, உரிய நேரத்தில் கூட்டாக நிறைவேற்றுவது முஸ்லிமான ஆண்கள் (பெண்கள் தனியாக தொழலாம்) மீது கடமையாகும். எனவே இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு, உதாரணமாக, ஒருவருக்கு இரவு 10 மணிக்குத் தூங்கினால் தான் அவரால் நேரத்துக்கு எழும்ப முடியும் என்றிருந்தால், மேலே உள்ள இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்துப்படி குறிப்பிட்ட மனிதர் இரவு 10 மணிக்கு தூங்குவது, அவருக்கு கடமையாகும்.
எனவே, சுபஹ் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதிலிருந்து எமது நாட்கள் ஆரம்பிக்கட்டும்.
சுபஹ் தொழுகையை உரிய நேரத்தில் தொழுபவர்கள், தஹஜ்ஜத்தைப் பற்றி சிந்திக்கட்டும்.
அல்லாஹ்வை நெருங்குவோம்.
வேற எதுவும் எவரும் அந்த நாளையில் நமக்கு பிரயோசனம் அளிக்காது. அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் நாம் செய்த செயல்களைத் தவிர.
இந்த நினைவுபடுத்தளின் மூலம், இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சுபஹ் கிடைக்கும் என்றால், இந்த அடியானுடைய உளத் தூய்மைக்காக பிரார்த்தியுங்கள்.
Brother Mohamed Nizzad
Rz Omar
உலகில் உள்ள மாற்றுமதத்தவர்களுள் பௌத்தர்களே அதிகம் பண்பட்டவர்கள் சகிப்பு தன்மை உள்ளவர்கள் என்று நான் அறிந்த ஒரு அறிஜர் கூறுகிறார் அப்படிப்பட்ட மக்களிடைய இன்று இவ்வாறான முஸ்லிம்கள்பற்றிய கசப்புத்தன்மை வர என்னகாரணம், இத்தனைகாலமும் எம்முடன் ஒன்றாக இருந்த மக்கள் இவ்வாறு மாற எது ஏதுவாக இருந்தது? சற்று ஆழமாக சிந்தித்தால் விடை கிடைத்துவிடும். இதற்கு முழுக்க முழுக்க காரணம் முஸ்லிம்களே! எமது மக்கள் எப்போதும் இருப்பது போல் இருந்திருந்தால் இன்று இவ்வாறான பிரட்சினைகளுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியிருக்காது முஸ்லிம்களிடம் ஏற்பட்ட மாற்றம் என்ன ???
#1. முதற்காரணி இலங்கையில் காணப்படும் முஸ்லிம்களின் துரித சனத்தொகை வளர்ச்சி (நாங்க ஒன்னும் செய்யல்ல அது அல்லாஹ் குடுக்குறது)
#2. புதிதாக பெரும்பாலான முஸ்லிம்கள் தாடி வளர்கிறார்கள் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் (எங்க க்ரூப்ல தாடி இல்லாதவங்கள நாங்க மனிசனாவே மதிக்கிறதில்ல)
#3. பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் தங்களது உத்தியோக பூர்வ உடையாக அபாயா, ஹிஜாப் அணிகிறார்கள். (I.e - ஒரு நாலு அஞ்சி வர்சத்துக்கு முதல் எங்க ஸ்கூல் டீச்சேர் எல்லாருமே சாரி தான் உடுப்பாங்க ஆனா இப்ப எல்லரும் நிஞ்சாவா மாறிட்டங்க; முகம் கை மட்டும் தான் வெளியில தெரியும். அல்ஹம்துலில்லாஹ் ) (துணி பிஸ்னஸ் போகுதில்லையோ)
#4. முன்னர் வெள்ளிக்கிழமை மட்டும் தொழுகை நடத்திவந்த முஸ்லிம்கள் தற்போது ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகிறார்கள் (இவங்கள பள்ளிக்கு கூட்டிக்கிட்டுவர ஜமாஅத் காரங்க படுற பாடு உங்களுக்கு என்ன தெரியும்)
#5. முஸ்லிம் ஆண்கள் "தோப்" அணிகிறார்கள் பெரும்பாலான திரைப்படங்களில் இவ் உடை தீவிரவாதிகளின் சீருடையாக சித்தரிக்கபடுகிறது (எனக்கிட்டையும் ஒண்டு இருக்கு போன ஹஜ்ஜுப்பெருனாலுக்கு எடுத்தது )
#6. அரசியல் சதி மற்றும் முஸ்லிம்(பெயரில் கட்சி நடத்தும்) அரசியல் தலைவர்களின் வாதிகளின் கையாலாகாத்தனம்.
#7. புதிதாக மூலைமுடுக்கெல்லாம் முளைத்துள்ள பள்ளிவாயில்கள் (இவங்க புடிக்குற குரூப் பைட் நமக்குதானே தெரியும்)
#8. சர்வதேசத்தில் ஏற்பட்டுவரும் இஸ்லாமிய மறுமலர்ச்சி குறிப்பாக அரபு வசந்தம் (பயந்துட்டாங்களோ)
அல்ஹம்துலில்லாஹ்! (பெயரளவு)முஸ்லிம்கள் (நடைமுறை)முஸ்லிம்களாக மாறிவருகிறார்கள் அகவே இனிவரும் காலங்களில் நாம் சில துன்பங்களை தாங்கியும் தியாகங்களை செய்தும்தான் ஆகவேண்டும். இன்று முழு முஸ்லிம் உலகிலும் (குறிப்பாக பலஸ்தீன், சிரியா, எகிப்து) மக்கள் நடத்திவரும் மார்கத்திட்கான போராட்டத்திற்கு மத்தியில் இது பெரிய ஒருவிடயம் அல்ல
கடைசியாக ஓன்று அல்லாஹ்வின் ஒளியை இவர்கள் தங்களது வாய்களால் ஊதி அணைக்க முயட்சிக்கிரார்கள் :D
வல்ல அல்லாஹ் எப்போதும் எம்முடன் இருக்கிறான் என்பதை மறந்துவிடாதீர்கள் சகோதர்களே!
இறுதியாக
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
\/
Rz Omar
(நன்றி - கூகுள், Database of பல பல சேனா)
Rz Omar
சிறு வயது வாழ்க்கை
16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.
1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இத்தாலி நாட்டின் ஆதிக்கம் நிலைநாட்டியிருந்தபோது ஒரு பள்ளிக்கூட வயதான ஆசிரியர் ‘உமர் முக்தார்’ மக்களை தன் வீர உரையால் தட்டி எழுப்பி இத்தாலி நாட்டின் பலமிகுந்த படையினரை சரிசமமாக நின்று போரிட்டு, பின்பு இத்தாலி படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்.
இத்தாலிக்கும் லிபியாவுக்குமிடையே உக்கிரப் போர் மூண்டது. தமது நாட்டு பாலைவனப் புவியியல் அமைப்பைப் பற்றி நன்கு பரிச்சயமுள்ளவர் உமர் முஃக்தார். அந்த அறிவைப் பயன்படுத்தி இத்தாலிக்கெதிராகப் போர்புரியும் உத்திகளைத் தன் படை வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். அன்று உலகில் மிகவும் பலம் பொருந்திய ஒரு அணியாக பெனிட்டோ முசோலினியின் படை விளங்கியது. எனினும், பாலைவனப் புவியியலை அவர்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறினர்.
உமர் முஃக்தார் தொழில் ரீதியாக குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார். ஆனாலும் மிகச்சிறந்த கொரில்லா முறை போர்தந்திரவாதியாக விளங்கினார். தன் இயக்கத்தினருக்கு இவரே ஆசானாக இருந்து கொரில்லா போர் முறையை பயிற்றுவித்தார். பாலைவனங்களில் போர் புரியும் தந்திரங்களையும் அறிந்தவர். பல நேரங்களில் இத்தாலியப் படையை தாக்குதலினால் நிலைகுலையச் செய்திருக்கின்றார். இருப்பினும் 1931ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி பாசிஸ இத்தாலிப் படையினரால் உமர் முஃக்தார் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனால் 20 ஆண்டுகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு தளர்ந்தது இறுதியில் இத்தாலியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு மரணதணைடனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
உமர் முஃக்தார் கைது செய்யபட்டு தண்டணையை எதிர்நோக்கியிருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இத்தாலி நாட்டுக்கெதிராக லிபியா மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்களை சித்தரிக்கும் விதமாக ஆங்கிலத் திரைப் படம் ஒமர் முக்தார் என்ற பெயரில் 1980 களில் வெளியிடப்பட்டது. மக்களிடையே அத்திரைப்படம் மகத்தான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
1930 -ல் இத்தாலியில் பாசிஸ்ட் முசோலினி உருமினான… ” ஏன் இன்னும் லிபியா விழவில்லை “
படைத்தளபதி பயந்து கொண்டே ” சர், அங்கு கலகக்காரர்களை அடக்குவது கடினமாக உள்ளது”
முசோலினி: ” யார் அவர்களை வழி நடத்துவது ?”
தளபதி: ” ஒமர் முக்தார் “
முசொலினி: “ஒமர் முக்தார் ?!! யார் இவன் ?!”
தளபதி: ” சர், அவர் ஒரு ஆசிரியர்…He is a teacher “ முசோலினி ஆச்சரியத்துடன் ” a teacher ?!!” பின் ஏதோ சிந்தனை வயப்பட்டவனாக தனக்குள்ளே ” Even I was a teacher ” என்கிறான்.
பாலைவன சிங்கம் என அனைவராலும் புகழப்பட்ட, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலியின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய “ஓமர்-அல்-முக்தார்” பற்றி தெரிந்தவர்கள் இது உண்மையாக நடந்திருக்கும் என தயங்காமல் ஒத்துக் கொள்வார்கள்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் ஒரு சாதாரண பள்ளிக்கூட ஆசிரியர் என்றால் நம்ப முடிகிறதா?
இத்தனைக்கும் இவரது ஆட்களிடம் பயிற்சியோ, நவீன ஆயுதங்களோ, போக்குவரத்து சாதனங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கூட கிடையாது. தணியாத சுதந்திர வேட்க்கையும், அந்நியரிடம் அடிமைப் படக் கூடாது என்ற வெறியும் ஒமர் முக்தார் என்ற ஆசிரியரின் வழிகாட்டுதலும் மட்டுமே இருந்தது.
ஒமர் முக்தார் வழி காட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே முன்னின்று போரிட்டார். முதிர்ந்த வயதில் நோய் வாய்ப்பட்ட பிறகும் மலையில் மறைந்து வாழ்ந்து கொரில்லா போர் புரிந்து கொண்டிருந்த போது, அவரது குழுவினர் அவரை தப்பித்து போய் விடும் படிவற்புறுத்தியதையும் மறுத்து சண்டையிட்டு கடைசியில் இத்தாலியப் படைகளிடம் சிக்கினார். இத்தாலியப் படை அவரை சலோக் நகரில், 1931 ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் தேதி எல்லா மனித உணர்வுகளையும் மீறி, சர்வதேச விதி முறைகளையும் மீறி, அவரது வயதையும் பொருட்படுத்தாமல் தூக்கிலிட்ட போது அவருக்கு வயது 80.(எண்பது). சங்கிலியால் பிணைக்கப் பட்டு நகரின் முச்சந்தியில் இழுத்து வந்து தூக்கிலிடப் படுமுன் தன் கையில் பிடித்திருந்த குர்ஆனை ஓதிவிட்டு பின் தன்னை தூக்குக் கயிறுக்கு இறையாக்கினார். அவரது மன உறுதி இத்தாலி நாட்டு அரசை கதிகலங்க வைத்து விட்டதோடு மட்டுமல்லாமல் லிபியா மக்களிடமே ஆட்சியினை ஒப்படைத்து விட்டு வெளியேறினர்.
சிறையில் சிறை அதிகாரி “ஆசிரியரான உங்களுக்கு ஏன் இதெல்லாம் வீண் வேலை?” என்ற போது ” ஆசிரியன் என்பவன் கற்பித்தால் மட்டும் போதாது அதை முழுவதும் நம்புபவனாகவும் அதன்படியே நடப்பவனாகவும் இருக்க வேண்டும்” என்றாராம் ஒமர் முக்தார்.
Rz Omar
Ibn Taymiyah (may Allah (glorified and exalted be He) have mercy on him) said:
“When I am confused in my understanding of an issue in religion, I forthwith beseech Allah to
“When I am confused in my understanding of an issue in religion, I forthwith beseech Allah to
forgive me one thousand times - maybe a little more or maybe a little less.
Then, Allah opens what was closed for me and I come to understand.”
Click to read more: http://productivemuslim.com/seeking-knowledge/#ixzz2Ldo4f1ib
Subscribe to:
Posts (Atom)