25
Feb 2013
Feb 2013
Rz Omar
இஸ்லாமிய சட்டவியலில், அறிஞர்கள் சொல்லக்கூடிய ஒரு விடயம் தான்
"அல்லாஹ் கடமையாக்கிய ஒரு விடயத்தை நிறைவேற்றுவதற்கு இன்னுமொரு காரியம் நடைபெற்றால் தான் அது சாத்தியம் என்றிருந்தால், குறிப்பிட்ட அந்த விடயமும் கடமையாக மாறும்"
அந்த அடிப்படையிலே,
சுபஹ் தொழுகையை, உரிய நேரத்தில் கூட்டாக நிறைவேற்றுவது முஸ்லிமான ஆண்கள் (பெண்கள் தனியாக தொழலாம்) மீது கடமையாகும். எனவே இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு, உதாரணமாக, ஒருவருக்கு இரவு 10 மணிக்குத் தூங்கினால் தான் அவரால் நேரத்துக்கு எழும்ப முடியும் என்றிருந்தால், மேலே உள்ள இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் கருத்துப்படி குறிப்பிட்ட மனிதர் இரவு 10 மணிக்கு தூங்குவது, அவருக்கு கடமையாகும்.
எனவே, சுபஹ் தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதிலிருந்து எமது நாட்கள் ஆரம்பிக்கட்டும்.
சுபஹ் தொழுகையை உரிய நேரத்தில் தொழுபவர்கள், தஹஜ்ஜத்தைப் பற்றி சிந்திக்கட்டும்.
அல்லாஹ்வை நெருங்குவோம்.
வேற எதுவும் எவரும் அந்த நாளையில் நமக்கு பிரயோசனம் அளிக்காது. அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் நாம் செய்த செயல்களைத் தவிர.
இந்த நினைவுபடுத்தளின் மூலம், இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு சுபஹ் கிடைக்கும் என்றால், இந்த அடியானுடைய உளத் தூய்மைக்காக பிரார்த்தியுங்கள்.
Brother Mohamed Nizzad