கண்ணியத்திற்குரிய பெண்களே


கண்ணியத்திற்குரிய பெண் சகோதரிகளுக்கு உலமாக்கள் சொல்லக்கூடிய விடயம் தான் "கணவன் கோபமாக இருக்கிறார் என்று தெரிந்தால், நீங்கள் ஸாலிகான பெண் என்றால் அந்த நேரத்தில் நீங்கள் அவருடைய பேச்சுக்கு மறு பேச்சு பேச வேண்டாம். அமைதியாகிவிடுங்கள்!"

அழகான ஒரு சம்பவம்: ஒரு பெண் ஒரு உலமாவிடம் சென்று சொன்னாறாம், அடிக்கடி எனக்கும் என்ட கணவனுக்கும் இடைல பிரச்சினைகள் தான் வருது, இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கன்னு. அப்ப அந்த உலமா சில விபரங்களை கேட்டுவிட்டு சொன்னாறாம். நான் இந்த தண்ணில ஊதி தாரன்! நீங்க என்னசெய்யனும்னா உங்கட கணவர் உங்களோட கோபமா பேசுற நேரம் இந்த தண்ணில கொஞ்சம் எடுத்து விழுங்காம வாய்க்குள்ள வைத்துகொள்ளுங்க. எப்ப உன்குட கணவர் அமைதியாகுவாரோ அப்ப இத விழுங்கிடுங்க. இப்படியே கொஞ்ச நாளைக்கு செய்து வாங்க சரியாகிடும்னு. இப்ப இவ வீட்டுக்கு வந்து கணவன் கோபமா இருக்கிற நேரம் எல்லாம் உலமா சொன்ன மாதிரி செய்ற. இப்ப கொஞ்ச நாள்ல அவங்கட பிரச்சினை தீர்ந்துட்டது. கணவன் இப்ப இவகூட நல்ல இரக்கும். இப்ப அந்த பெண் உலமாகிட்ட போய் சொன்னாவாம். பிரச்சினை எல்லாம் இப்ப தீர்ந்துட்டது. அந்த தண்ணில நீங்க என்ன ஓதி தந்திங்கனு? உலமா சொன்னாறாம், நான் ஒண்டும் ஓதல்ல. உங்கட கணவன் கோபமா இருக்கிற நேரம் நீங்களும் பேச அவரும் பேச ஒரு நாளும் ஒற்றுமை உண்டாகிறது. பிரச்சினைதான் அதிகமாகும். அதுதான் அவர் கோபமாக இருக்கிற நேரம் நீங்க அமைதியாக இருக்கத்தான் அப்படி தண்ணிய வைத்திருக்க சொன்னன்னு சொன்னாறாம் :)

ஏனென்றால் பொதுவாக ஆண்கள் வெளியிடங்களுக்கு சென்று வரக்கூடியவர்கள். சில பிரச்சினைகளை, அழுத்தங்களை வெளியில் முகம்கொடுத்துவிட்டு வந்திருக்ககூடும். அந்த இறுக்கமான மனநிலையை வீட்டிலே சில நேரம் வெளிப்படுத்தக்கூடும். அந்த நேரம் பெண்களும் பேசுவார்கள் என்றிருந்தால் குடும்பத்துல பிரச்சினைகள் பெரிதாகுமே தவிர, ஒற்றுமை உண்டாகாது.

Jazakallah-Mohamed Nizzad