தொலைந்து போன மழலைப் பருவம்...

தற்போது பேஸ்புக் பக்கங்களிலும்,சமூக வலைதளங்களிலும் comedy,jolly,fun என்ற பெயரில் ஏதாவது சில புகைப்படங்களைப் பதிந்து அதில் உள்ளவர்கள் பேசுவது போலவே இவர்களாக வசனங்கள்
எழுதி like,comment,share செய்து கொள்வார்கள்.
ஏதோ அரசியல்வாதிகளையும்,மத வியாபாரிகளையும் தான் செய்கிறார்கள் என்று பார்த்தால் பிஞ்சு குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை....பிஞ்சிலேயே பழுக்க வைப்பது போல் பெரியமனுசத்தனமான வசனங்கள்.

மழலைகள் சிகரெட் பிடிப்பது போன்ற Photoshop செய்யப்பட்ட புகைப்படங்கள்......குழந்தைகளை அவர்களுடைய இயல்பை விட்டும் திசை திருப்பும்
இத்தகைய போட்டோகளுக்கும் நாமும்,லைக்,ஷேர் பண்ணுகிறோம்...என்ன கொடுமை?????

இப்ப உள்ள மழலைகளும் நெஞ்சில் நஞ்சை ஊட்டும் சினிமா பாட்டுகளை கேட்டு வளர்வதாலும்,காமெடி என்ற பெயரில் பெற்றோரால் பார்க்க சலுகை அளித்து அனுமதிக்கப்படும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளைப் பார்ப்பதால் வயதுக்கு மீறிய பேச்சுகளை எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது....

இப்படிப்பட்ட பின் விளைவுகளும் நம் பிள்ளைகள் சந்திக்க நேர்கிறது.... ஓடி ஆடி வியர்வை சிந்திய நம்முடைய பிள்ளைப் பருவம் எங்கே???
மழையில் நனைந்த நம் மழலைப்பருவம் எங்கே???
இப்ப உள்ள பசங்களை மழையில் நனைய விடாமல் கொடுமைப் படுத்துகிறோம்.... காரணம் காய்ச்சல் வருமாம்.....மழை நம் உடம்பில் உள்ள சூட்டை வெளியேற்றுவதுதான் காய்ச்சல் என அறியாமல் குழந்தைகளை மிரட்டி ஒடுக்குவதால் தான் இப்ப உள்ள பசங்க ஆள் இல்லாத நேரம் பார்த்துத் தண்ணீரில் ஆட்டம் போடுகிறார்கள்.

இன்னும் சில பெற்றோர் வெயிலில் கூட விளையாட அனுமதிப்பதில்லை..........தனியாக வளரும்,யார் கூடவும் பழகாமல் இருக்கும் பிள்ளைகளை விட நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் பிள்ளைகள் வெற்றி,தோல்வியை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்கிறார்களாம்.... முன்னொரு காலத்தில் நாமெல்லாம் பூந்தளிர்,அம்புலி மாமா,வாண்டு மாமா, சிறுவர் மலர் புத்தகங்களில் நிறைய கதைகள் படித்துள்ளோம்....அதில் நல்லவர்கள் பொறுமையாக இருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் பரிசுகளையும்,பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு பிறர் உதவி செய்வார்கள் என்ற கருத்துகளும் நம் மனதில்
பதிந்தன......ஆனால்,இப்பொழுது உள்ள பிள்ளைகள் இந்த சுகங்களையெல்லாம் அனுபவிக்காமல் டைம் டேபிள் போடப்பட்ட மிசின்களைப் போல்
வாழ்கிறார்கள்..

நாம் பெற்ற இன்பங்களை நம் பிள்ளைகளுக்கும் கொடுப்போமா???? இயற்கையாக சாப்பிட்டு ஓடி ஆடிய காலமெல்லாம் மலையேறி போய் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்களை தின்று விளையாடுகிறார்கள்.....

பிறரை அடிப்பது,தாக்குவது போன்ற வன்செயல்கள்,வன்முறை எண்ணங்கள் இளைய சமுதாயத்தினரிடம் அதிகரிப்பது வேதனைப் பட வேண்டிய விசயம்......வீடியோ கேம்,செல் போன் கேம் இதனால் கை விரல்கள் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் உண்டாகிறது.....

நம் பிள்ளைகளுக்கு புத்தகங்களை படிக்க சொல்லி ஆர்வமூட்டலாம்.... இயந்திரங்களை விட்டு வெளியே சென்று ஓடியாட விளையாட அனுமதிக்கலாம்...... பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உள்ள நீதி போதனை கதைகளை தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.....பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை குறைக்கச் செய்து புத்துணர்ச்சி உள்ள உணவுகளை பரிமாறலாம்.....

நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய்,தந்தையின் கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோமா???

நன்றி-நேர்வழி