தொலைந்து போன மழலைப் பருவம்...

தற்போது பேஸ்புக் பக்கங்களிலும்,சமூக வலைதளங்களிலும் comedy,jolly,fun என்ற பெயரில் ஏதாவது சில புகைப்படங்களைப் பதிந்து அதில் உள்ளவர்கள் பேசுவது போலவே இவர்களாக வசனங்கள்
எழுதி like,comment,share செய்து கொள்வார்கள்.
ஏதோ அரசியல்வாதிகளையும்,மத வியாபாரிகளையும் தான் செய்கிறார்கள் என்று பார்த்தால் பிஞ்சு குழந்தைகளையும் விட்டு வைப்பதில்லை....பிஞ்சிலேயே பழுக்க வைப்பது போல் பெரியமனுசத்தனமான வசனங்கள்.

மழலைகள் சிகரெட் பிடிப்பது போன்ற Photoshop செய்யப்பட்ட புகைப்படங்கள்......குழந்தைகளை அவர்களுடைய இயல்பை விட்டும் திசை திருப்பும்
இத்தகைய போட்டோகளுக்கும் நாமும்,லைக்,ஷேர் பண்ணுகிறோம்...என்ன கொடுமை?????

இப்ப உள்ள மழலைகளும் நெஞ்சில் நஞ்சை ஊட்டும் சினிமா பாட்டுகளை கேட்டு வளர்வதாலும்,காமெடி என்ற பெயரில் பெற்றோரால் பார்க்க சலுகை அளித்து அனுமதிக்கப்படும் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட காட்சிகளைப் பார்ப்பதால் வயதுக்கு மீறிய பேச்சுகளை எல்லா வீடுகளிலும் சர்வ சாதாரணமாக பார்க்க முடிகிறது....

இப்படிப்பட்ட பின் விளைவுகளும் நம் பிள்ளைகள் சந்திக்க நேர்கிறது.... ஓடி ஆடி வியர்வை சிந்திய நம்முடைய பிள்ளைப் பருவம் எங்கே???
மழையில் நனைந்த நம் மழலைப்பருவம் எங்கே???
இப்ப உள்ள பசங்களை மழையில் நனைய விடாமல் கொடுமைப் படுத்துகிறோம்.... காரணம் காய்ச்சல் வருமாம்.....மழை நம் உடம்பில் உள்ள சூட்டை வெளியேற்றுவதுதான் காய்ச்சல் என அறியாமல் குழந்தைகளை மிரட்டி ஒடுக்குவதால் தான் இப்ப உள்ள பசங்க ஆள் இல்லாத நேரம் பார்த்துத் தண்ணீரில் ஆட்டம் போடுகிறார்கள்.

இன்னும் சில பெற்றோர் வெயிலில் கூட விளையாட அனுமதிப்பதில்லை..........தனியாக வளரும்,யார் கூடவும் பழகாமல் இருக்கும் பிள்ளைகளை விட நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் பிள்ளைகள் வெற்றி,தோல்வியை ஜீரணிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக வளர்கிறார்களாம்.... முன்னொரு காலத்தில் நாமெல்லாம் பூந்தளிர்,அம்புலி மாமா,வாண்டு மாமா, சிறுவர் மலர் புத்தகங்களில் நிறைய கதைகள் படித்துள்ளோம்....அதில் நல்லவர்கள் பொறுமையாக இருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் பரிசுகளையும்,பிறருக்கு உதவி செய்வதால் நமக்கு பிறர் உதவி செய்வார்கள் என்ற கருத்துகளும் நம் மனதில்
பதிந்தன......ஆனால்,இப்பொழுது உள்ள பிள்ளைகள் இந்த சுகங்களையெல்லாம் அனுபவிக்காமல் டைம் டேபிள் போடப்பட்ட மிசின்களைப் போல்
வாழ்கிறார்கள்..

நாம் பெற்ற இன்பங்களை நம் பிள்ளைகளுக்கும் கொடுப்போமா???? இயற்கையாக சாப்பிட்டு ஓடி ஆடிய காலமெல்லாம் மலையேறி போய் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்களை தின்று விளையாடுகிறார்கள்.....

பிறரை அடிப்பது,தாக்குவது போன்ற வன்செயல்கள்,வன்முறை எண்ணங்கள் இளைய சமுதாயத்தினரிடம் அதிகரிப்பது வேதனைப் பட வேண்டிய விசயம்......வீடியோ கேம்,செல் போன் கேம் இதனால் கை விரல்கள் பாதிக்கப்பட்டு மன அழுத்தமும் உண்டாகிறது.....

நம் பிள்ளைகளுக்கு புத்தகங்களை படிக்க சொல்லி ஆர்வமூட்டலாம்.... இயந்திரங்களை விட்டு வெளியே சென்று ஓடியாட விளையாட அனுமதிக்கலாம்...... பெரியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் உள்ள நீதி போதனை கதைகளை தாய்மார்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.....பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை குறைக்கச் செய்து புத்துணர்ச்சி உள்ள உணவுகளை பரிமாறலாம்.....

நல்ல ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது ஒவ்வொரு தாய்,தந்தையின் கடமை என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோமா???

நன்றி-நேர்வழி 

பதப்படுத்தப்பட்ட மையத்துகள்!


பிணங்கள் கெட்டு போகவும் கூடாது. 
பேணி பாதுகாக்க ப்றீசர் மோட்சுவரியிலோ இடமில்லை. 
ஜஸ்பாலங்களை மேனயில் தாங்கி கிடக்கும் மையத்துக்கள் இவை. 
இதை பார்க்கும் போது நம் இதயம் பிசையப்படும் உணர்வு  
அதே இதயத்தில் வரவில்லையா? 
எமக்கு ஒரு போதும் வராது. 

இவர்கள் இரத்தத்தைதானே நாம் கோலாவாக குடிக்கின்றோம்.


ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவது எப்படி?



அல்லாஹுத் தஆலா முஃமின்களாகிய எமக்கு இரண்டு பெருநாட்களைத் தந்துள்ளான். ஒன்று ஈதுல் அழ்ஹா. அடுத்தது ஈதுல் பித்ர். இவ்விரு பெருநாட்களையும் முக்கியமான இரண்டு வணக்கங்களைத் தொடர்ந்துதான் அல்லாஹ் எமக்குத் தந்திருக்கிறான். ரமழானுடைய நோன்பைத் தொடர்ந்து ஈதுல் பித்ர் பெருநாளையும் ஹஜ் கடமையை அடுத்து ஈதுல் அழ்ஹா எனும் தியாகத்திருநாளையும் நாம் கொண்டாடுகிறோம். மாத்திரமல்ல, ஈகைத்திருநாளைக் கூட தக்பீரோடு ஆரம்பிக்கிறNhம். தக்பீரோடு நிறைவு செய்கிறNhம். இடையிலே மீண்டும் தொழுகையிலும் மற்றும் பல வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகிறோம்.


பெருநாள் தினத்தை மறுமையோடு ஒப்பிட முடியும். மறுமை நாளில் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதனை அல்குர்ஆன் நமக்குச் சொல்லித் தருகிறது. 



“சில முகங்கள் அந்நாளிலே மகிழ்ச்சியாக இருக்கும் (சிரித்துக் கொண்டிருக்கும்). அந்நாளில் மற்றும் சில முகங்கள் புழுதி படிந்த நிலையில் இருக்கும். முகங்களிலே இருள் சூழ்ந்திருக்கும்.”



பெருநாள் தினங்களிலும் சில முகங்கள் இப்படித்தான் இருக்கும். துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களிலும் நோன்பு நோற்று, நற்கருமங்கள் செய்து, இபாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு இந்த ஹஜ்ஜுப் பெருநாள் மகிழ்சிகரமானதாக இருக்கும். நற்கருமங்கள் செய்தவர்கள் இந்நாளில் மலர்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் இன்முகங்களில் புன்னகை பூத்திருக்கும்.

மறுபக்கம், இந்த வருடத்தைப் பாழ்படுத்தியவர்கள், அல்லாஹ்வை மறந்து பாவகாரியங்களில் ஈடுபட்டவர்கள், இந்த துல்ஹஜ் மாதத்தை வீணாகக் கழித்தவர்கள், ஹஜ் கடமையாக இருந்தும் அதை நிறைவேற்றாதவர்கள் இந்த ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இருள் சூழ்ந்த முகத்தோடு இருப்பார்கள். அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியோ சந்தோசமோ தென்படாது. 


எனவே, பெருநாள் தினம் என்பது மறுமை நாளுக்கு ஒப்பான ஒரு நாள் என்றால் அது மிகையாகாது.



பெருநாள் தினத்தை ஆடிப் பாடி கூத்தாடி, கும்மாளமிட்டு வீண் விளையாட்டுகளில் கழிக்கக் கூடாது. அது தக்பீரோடு ஆரம்பிக்கிறது. தொழுகையோடு துவங்குகிறது. தக்பீரோடு நிறைவு பெறுகிறது. நல்லமல்கள் புரியக் கூடிய ஒரு நன்னாள் அது. ஈதுல் அழ்ஹா தியாகத் திருநாளை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித் தந்த முறைப் பிரகாரம் கொண்டாட வேண்டும்.



பெருநாள் தினத்தில் விடேசமாக பெருநாளுக்காக குளிப்பது ஒரு முக்கியமான ஸுன்னா. நறுமணம் பூசிக் கொள்வதும் இருக்கின்ற ஆடைகளுள் அழகான ஆடைகளை அணிந்து கொள்வதும் பெருநாள் தினத்திலே நாம் கடைபிடிக்க வேண்டிய ஸுன்னாக்கள். ஆடை அணிகலன்கள் புத்தம் புதியதாக இருக்க வேண்டும் என்பதில்லை. சிறந்த ஆடையாக இருந்தால் போதுமானது. 



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பேரர் ஹஸன் (ரழியல்லாஹு அன்ஹு)  அவர்கள்,”பெருநாள் தினத்திலே எம்மிடம் இருக்கக்கூடிய ஆடைகளுள்  மிகச் சிறந்த ஆடையை நாம் அணிய வேண்டும் எம்மிடமிருக்கும் நறுமணங்களுள் மிக உயர்ந்த நறுமணத்தைப் பூசிக் கொள்ள வேண்டும் எம்மிடமுள்ள கால்நடைகளுள் மிகவும் பெறுமதியான கால்நடையை உழ்ஹிய்யாவாக அறுத்துப் பலியிடவேண்டும் என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குப் பணித்திருக்கின்றார்கள்” எனச்  சொல்கிறார்கள். 



இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இரண்டு பெருநாட்களின்போதும் தன்னிடம் இருக்கின்ற ஆடைகளுள் மிக அழகான ஆடையைத் தெரிவு செய்து அணிந்து கொள்வார்கள். அவர்களிடம் ஒரு விஷேடமான ஆடை இருந்தது. குறிப்பாக அந்த ஆடையை ஈதுல் பித்ர் பெருநாள் தினத்திலும் ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்திலும் அவர்கள் அணிவார்கள்.”



ஈதுல் பித்ர்- நோன்புப் பெரநாளைப் பொறுத்தவரை காலையில் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னர் காலை உணவை உட்கொள்வது நபிவழியாகும். ஈதுல் அழ்ஹா- ஹஜ்ஜுப் பெருநாளைப் பொறுத்தவரை நேரகாலத்தோடு பள்ளிவாசலுக்குச் சென்று பெருநாள் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பியதன் பின்னரே காலை உணவை உட்கொள்ள வேண்டும். அதுதான் ஸுன்னா. இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள். 



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நோன்புப் பெருநாளில் காலை உணவை அருந்திய பின்னரே தொழுகைக்குச் செல்வார்கள். ஆனால், ஹஜ்ஜுப் பெருநாளில் தொழுகையை நிறைவேற்றி விட்டு வீடு வந்துதான் காலை உணவை சாப்பிடுவார்கள் என்று அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள். 



பெருநாள் தொழகையை பள்ளிவாசலில் அமைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் எந்த ஆட்சேபனையும் கிடையாது. அது அனுமதிக்கப்பட்டது. ஆனால்,இரு பெருநாள் தொழுகைகளை பொதுவான ஒரு மைதானத்தில் அல்லது ஒரு திறந்த வெளியில் (முஸல்லா) அமைத்துக் கொள்வது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய முக்கியமான ஒரு  சுன்னத்தாகும். 



மழை போன்ற நியாயமான ஒரு காரணத்துக்காக மாத்திரம் பெருநாள் தொழுகையை பள்ளிவாசலில் நடத்தலாம். அப்படி நியாயமான காரணங்கள் இல்லாத நிலையிலும் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டல்ல என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும்.



நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் மழை காரணமாக ஒரே ஒரு பெருநாள் தொழுகைகயைத்தான் பள்ளிவாசலில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஏனைய பெருநாள் தொழுகைகளையெல்லாம் அவர்கள் ஒரு பொதுவான மைதானத்தில் அல்லது திறந்த வெளியில்தான் தொழுகை நடத்தியிருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 



திறந்த இடத்திலே பெருநாள் தொழுகையை அமைத்துக் கொள்வதோடு ஆண்கள் மாத்திரமன்றி, பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் அனைவரும் அந்த மைதானத்துக்கு செல்வதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய வழிமுறையைச் சார்ந்ததாகும். 



உம்மு அதிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். “பெருநாள் தினத்தில் கன்னிப் பெண்கள் உட்பட மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள்கூட தொழுகை நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று நபியவர்கள் எங்களைப் பணித்தார்கள். முஸ்லிம்களின் பிரார்த்தனையை, தொழுகையை எல்லோரும் கண்டுகழிக்க வேண்டும். மாதவிடாய் உடன் இருக்கின்ற பெண்கள் மாத்திரம் அந்த மைதானத்திலே ஒரு பக்கமாக ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமக்குப் பணித்திருக்கிறார்கள்” என உம்மு அதிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹு முஸ்லிம்) 



“நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தன்னுடைய மனைவிமார் உட்பட தனது பெண் பிள்ளைகள் எல்லேரையும் பெருநாள் தொழுகைக்காக மைதானத்துக்கு அழைத்துச் செல்வார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸும் குறிப்பிடத்தக்கது. 



பெருநாள் தினத்தில் கடைபிடிக்க வேண்டிய மற்றுமொரு முக்கியமான ஸுன்னா இருக்கிறது. அதுதான் ஒரு பாதையால் தொழுகைக்குச் சென்று மற்றnhரு பதையால் வீடு திரும்புதலாகும். 



ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். “நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பெருநாள் தொழுகைக்காகச் செல்கின்றபோது ஒரு பாதையால் செல்வார்கள். திரும்புகின்றபோது மற்றnhரு வழியால் திறும்புவார்கள்.” (ஸஹீஹு முஸ்லிம்) 



தொழுகை நடைபெறும் இடத்துக்குச் செல்வதற்கு ஒரு பாதை மாத்திரமே இருக்கின்றது அல்லது வேறு பாதையினால் திரும்புவதில் ஏதும் சிரமங்கள் இருக்கின்றது என அறிந்தால் சென்ற பாதையினூடாகவே திரும்பி வருவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை என்பதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயுளில் மிகவும் அரிதாகக்  கிடைக்கக் கூடிய இத்தகைய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இப்படியான ஸுன்னத்துக்களை முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு  முயற்சிக்க வேண்டும்.



பெருநாள் தொழுகையுடன் தொடர்புடைய மிக முக்கியமான மற்றுமொரு ஸுன்னா பெருநாள் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுவது. ஆனால், இன்று பெருநாள் தொழுகை முடியுமானவரை தாமதப்படுத்தப்படுகிறது. இது நபியவர்களின் ஸுன்னாவுக்கு மாற்றமானது. அதிலும் குறிப்பாக, ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுக்குரிய தொழுகையை முடியுமான வரை நேரகாலத்தோடு தொழுவது மிக முக்கியமான ஒரு ஸுன்னா. ஜுன்துப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள். 



“இரண்டு ஈட்டியின் அளவு உயரத்திற்கு சூரியன் உயரும்போது ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையையும் சூரியன் ஓர் ஈட்டின் அளவுக்கு உயரும்போது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்  நிறைவேற்றுவார்கள்.” ஆதாரம்: அஹ்மத்

“முடியுமான வரை ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகையை நேரகாலத்தோடு நிறைவேற்றுவது ஸுன்னத்தாகும்” என இமாம் இப்னு குதாமா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சொல்கிறார்கள். 



அவ்வாறு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நேரகாலத்தோடு நிறைவேற்றும்போது உழ்ஹிய்யாவை நேரகாலத்தோடு கொடுப்பதற்கும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதற்கான கால எல்லையை அதிகரித்துக் கொள்ளவும் முடியும். நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பதாக ஸகாதுல் பித்ர் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் ஈதுல் பித்ர் தொழுகையை சற்று தாமதிப்பதில் தவறில்லை என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 



பெருநாள் தொழுகை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டிய, வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முஅக்கதா). பெருநாள் தொழுகையை நிறைவேற்றும் சிலர் பெருநாள் குத்பா பிரசங்கத்தை கேட்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெருநாள் தொழுகை ஒரு ஸுன்னா முஅக்கதாவாக இருப்பது போலவே பெருநாள் குத்பாவைக் கேட்பதும் ஒரு ஸுன்னா முஅக்கதாவே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  



மனிதர்களின் இயல்பை, சுபாவத்தை அறிந்து வைத்துள்ள இஸ்லாம், பெருநாள் தினத்தில் மகிழ்சியை வெளிப்படுத்தும் வகையில் ஹலாலான ஆகுமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. 



ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் சொல்கிறார்கள். “பெருநாள் தினத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பார்த்திருக்க அபீசீனியா அடிமைகள் ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். நான் அந்தக் காட்சியை நபியவர்களின் புஜத்துக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அந்தக் காட்சியைக் கண்டு கழிக்க வேண்டுமென்பதற்காக நபியவர்கள் குனிந்து தனது முதுகைப் பணித்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக அந்த அபீசீனியா அடிமைகளுடைய ஆடல், பாடல்களைக் கேட்டு ரசித்தேன். மனநிறைவு அடைந்ததைத் தொடர்ந்து நான் வீட்டுக்குள்ளே சென்று விட்டேன்.”



இந்த ஹதீஸ் ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹு முஸ்லிமிலே பதிவாகி இருக்கிறது. இந்த வகையில் எமது குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்தப் பெருநாள் தினத்தை மகிழ்யச்சியாகக் கொண்டாடும் வகையில் ஆகுமான, அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை, கலை நிகழ்ச்சிகளை ஷரீஆ வரம்புகளைப் பேணி ஒழுங்கு செய்ய வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கின்றது. இது மனிதனின் அழகியல் தேவை. இது நிறைவேற்றப்படாதபோது அவர்கள் வீண் விளையாட்டுக்கள், கேளிக்கைகளின்பால் திசை திரும்புவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகிறது. 



ஹராத்தை நாட வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அல்லாஹ் அனைத்தையும் ஹலாலாக்கியிருப்பது இந்த மார்க்கத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. எந்த ஒரு விடயத்தையும் ஹராமான வழிமுறையில் அனுபவிக்க வேண்டிய தேவை இல்லை. அதற்கான மாற்றீடு இஸ்லாத்தில் இருக்கிறது. 
அவற்றை நாம் கண்டறிய வேண்டும். இந்த வகையில் மனிதனிடம் இயல்பாகக் குடிகொண்டிருக்கும் இந்த கலை உணர்வுக்கு மதிப்பளித்து ரீஆவின் வரையறைக்குள் நின்று இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்களுக்கான நல்ல கலை நிகழ்ச்சிகளை, போட்டிகளை ஒழுங்கு செய்ய வேண்டிய கடப்பாடு சமூகத் தலைவர்களுக்குண்டு என்பதனை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.



பெருநாள் தினத்தல் அதிகமதிகம் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் சொhல் வேண்டும். அதுவும் முக்கிய ஸுன்னாக்களில் ஒன்று. ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை பெருநாள் தினம் தொடக்கம் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்கள் முடியும் வரை தக்பீர் சொல்வது ஸுன்னா. அந்த வகையில் தக்பீரை அதிகமதிகம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறNhம்.



“ஈத் பெருநாட்களை அல்லாஹ்வைப் புகழ்ந்தும் தக்பீர் கூறியும் அழகுபடுத்துங்கள்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.



பெருநாள் தினத்தில் நிறைவேற்ற வேண்டிய மற்றுமொரு ஸுன்னா இருக்கின்றது. அதுதான் வாழ்த்துத் தெரிவிப்பது. பெருநாள் தினத்தில் நபித் தோழர்கள் சந்தித்துக் கொண்டால் “தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்” (அல்லாஹ் உங்களையும் என்னையும் பொருந்திக் கொள்வானாக) என்று வாழ்த்துக் கூறியவர்களாக முஸாபஹா, முஆனகா செய்து கொள்வார்கள். இது வெறுமனே ஒரு வாழ்த்து மட்டுமல்ல, ஓர் உயர்த பிரார்த்தனையும்கூட.



ஈதுல் அழ்ஹாவைப் பொறுத்தவரை உழ்ஹிய்யா வலியுறுத்தப்பட்ட ஒரு ஸுன்னா (ஸுன்னா முஅக்கதா) என்ற வகையில் இந்தக் கடயையையும் நாம் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். உழ்ஹிய்யா கொடுப்பதினூடாக இரண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. ஒன்று, இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய தியாகத்தை, அர்ப்பணத்தை நினைகூர்தல். மற்றையது பெருநாள் தினத்தில் ஏழைகள், தேவையுடையவர்களுக்கு மாமிசத்தைக் கொடுத்து அவர்களுடைய தேவையை நிறைவேற்றுதல். 




இலங்கை பல்லின சமூகத்தவர்கள் வாழும் ஒரு நாடு. பிற சமயத்தவர்களுடைய உணர்வுகளை மதிப்பது எமது கடமை. இது இஸ்லாம் எம்மிடம் வேண்டிநிற்கும் ஓர் அடிப்படைப் பண்பு. இலங்கையில் பெரும்பான்மையினராக வாழ்கின்ற பௌத்தர்கள் பசு வதையை விரும்பாதவர்கள். அதனை வெறுப்பவர்கள். அவர்கள் பசு மாட்டை புனிதமாக மதிக்கின்ற நம்பிக்கை கொண்டவர்கள். எனவே, நாம் மாடு அறுத்து குர்பான் கொடுக்கின்றபோது அவர்களுடைய மத உணர்வுகள் புண்படுகின்ற அளவுக்கு நடந்து கொள்ளக் கூடாது. இலங்கையில் அரசாங்க விடுமுறை தினத்தில் (போயா தினம்) இறைச்சிக் கடைகள் மூடப்படவேண்டும் என்ற சட்டம் அமுலிலிருக்கின்றது. 



அத்தகைய ஒரு தினத்தில் ஹஜ் பெருநாள் வருமாக இருந்தால் அத்தினத்தில் மாடு அறுப்பதைத் தவிர்த்து அல்லாஹுத் தஆலா வழங்கியிருக்கின்ற மூன்று நாட்களுக்குள் உழ்ஹிய்யாவை நிரப்பமாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.



பெருநாள் தினத்தில் எமது சகோதர-சகோதரிகள், இனபந்துக்கள், அன்பர்களை, நண்பர்கள், உற்றார் உறவினரை அரவணைப்பது, ஆதரிப்பது, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது அவர்களுடனான உறவைப் பலப்பலப்படுத்திக் கொள்வது, பகைமை இருந்தால் அதனை அல்லாஹ்வுக்காக மன்னித்து உறவைப் புதுப்பித்துக் கொள்வது...போன்ற உன்னத கூலிகளைப் பெற்றுத் தரக்கூடிய அம்சங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, எமது பெற்றNhர், சகோதர, சகோதரிகள் உட்பட இரத்த உறவினர்களுடனான உறவுகளை பலப்படுத்திக் கொள்ள ஈதுல் அழ்ஹா பெருநாள் உதவும்.



“குடும்ப உறவை முறித்துக் கொண்டவன் சுவனம்  நுளைழய மாட்டான்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். 



மூன்று நாட்களுக்கு அதிகமாக ஒருவர் தனது சகோதரனை பகைத்துக் கொண்டிருப்பது ஆகுமானதல்ல (ஹராம்) என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள். 



மனிதர்கள் தவறிழைக்கக் கூடியவர்கள் பலவீனமானவர்கள் என்பதனால் நாம் எமது வீட்டில், காரியாலயத்தில், ஊரில் சக மனிதர்களோடு உறவாடுகின்றபோது பகைமை ஏற்பட்டிருக்கும் சிலரோடு அதிருப்தியடைந்திருப்போம் மற்றும் சிலரோடு கோபித்துக் கொண்டிருப்போம். இவற்றையெல்லாம் போக்கிக் கொள்வதற்கான அரியதொரு சந்தர்ப்பமாக இத்தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



ஒரு மனிதன் உலகில் இரண்டு விடயங்களை அடிப்படைத் தேவையாகக் கருதுகிறான். ஒன்று, நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டும் என விரும்புவது. இரண்டாவது தன்னுடைய வாழ்வாதாரத்தில் பரகத் கிடைக்க வேண்டும் என்பது.
“யார் தனது ஆயுள் அதிகரிக்க வேண்டும் என, அவருடைய வாழ்வாதாரத்தில் பரகத் அமைய வேண்டும் என விரும்புகிறரோ அவர் தனது இனபந்துக்களை சேர்ந்து நடக்கட்டும்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். 



இரத்த உறவைப் பேணி வாழ்ந்தால், தன் குடும்பத்தினருடன் நெருக்கமான உறவைப் பேணி வாழ்ந்தால் சுகமாக வாழலாம், நீண்ட ஆயுளைப் பெறலாம், மாதாந்த செலவினத்தைக் கட்டுப்படுத்தி மிச்சம் பிடித்துக் கொள்ளலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தில் விஸ்தீரணம் ஏற்படப் போவதில்லை என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.



இனபந்துக்களுடனான உறவைத் துண்டித்து, குறைத்துக் கொண்டு அவர்களை அனுசரிக்காமல், அரவணைக்காமல் சுயநலமிகளாக வாழ்கின்ற மனிதர்கள் அவர்கள் நினைத்தது போன்று ஆரோக்கியமாக வாழ முடியாது அவர்களது நாளாந்த செலவினம் குறைவடையாது. அதற்கு மாற்றமான விளைவையே அவர்கள் அனுபவிப்பார்கள். இதனை நாம் இன்று நடைமுறையில் காண்கின்றோம்.



இந்த மார்க்கம் ஓர் அற்புதமான மார்க்கம். எமக்குத் தேவையான அத்தனை வழிகாட்டல்களும்  இந்த மார்க்கத்தில் உண்டு. மனிதன் இந்த உலகிர் மகிழ்ச்சியாக வாழ நிறைவோடு, நிம்மதியாக வாழ, ஆரோக்கியதுடன் நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வதற்கான அற்புதமான வழிகாட்டல்களை இந்த மார்க்கம் வழங்கியிருக்கின்றது.



அத்தகைய வழிகாட்டலில் ஒன்றுதான், எமது உற்றார் உறவினர்களை, இரத்த பந்தங்களை நாம் எந்தளவு தூரம் சேர்ந்து நடக்கிறNhமோ அந்தளவுக்கு அல்லாஹுத் தஆலா எமது வாழ்வாதாரத்தில், ஆயுளில் விஸ்தீரணத்தை ஏற்படுத்துவான். இது ரஸூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாக்கு என்பதனை நாம் மறந்து விடக் கூடாது.



பெருநாள் தினத்தில் அண்டை அயலவர்களுக்கு நாம் அதிகம் உபகாரம் செய்ய வேண்டும். அவர்கள் முஸ்லிம்களாகவோ முஸ்லிமல்லாதவர்களாகவோ இருக்கலாம். அவர்களை அனுசரிக்கின்ற, அரவணைக்கின்ற ஒரு நாளாக பெருநாள் தினத்தை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களைச் சந்தித்தல், வாழ்த்துத் தெரிவித்தல், அவர்களுக்கு உணவுப் பண்டங்களைக் கொடுத்தனுப்புதல் போன்ற அவர்களை மகிழ்வூட்டுகின்ற சந்தர்ப்பமாகவும் இந்த பெருநாள் தினத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.



இவற்றக்கூடாக சாந்தியும் சமாதானமும் ஐக்கியமும் நிலவக்கூடிய ஒரு கிராமத்தை, ஒரு நகரத்தை, ஒரு நாட்டை, ஓர் உலகத்தைக் கட்டியெழுப்பவே இந்த மார்க்கம் விரும்புகிறது. இந்த மார்க்கத்தின் பிரதான நோக்கமே சாந்தி, சமாதானத்தை, அமைதியை இந்த உலகில் நிலைநிறுத்துவதுதான். 



இந்த மார்க்கம் ஒவ்வோர் அமலுக்கூடாகவும் மனிதர்களுக்கு மத்தியில் ஒற்றுமையை, ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறது. பெருநாள் தினம் இந்த ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் பிரகடனப்படுத்துவதற்கான நல்லதொரு சந்தர்ப்பம். குறிப்பாக, இந்த பெருநாள் தினத்தைத் தொடர்ந்து நாம் அந்நிய மக்களுடன் சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அவற்றினூடாக இந்த மார்க்கத்தின் செய்தியை எத்திவைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.



இந்த நாட்டில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்துவரும் நாம், போர்த்துக்கேயருக்கு எதிராகப் போராடியிருக்கிறோம் ஒல்லாந்தருக்கு எதிராகப் போராடியிருக்கிறNhம் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக உழைத்துள்ளோம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு அர்ப்பணங்கள், தியாகங்கள் செய்திருக்கிறNhம். போர்த்துக்கேயருக்கு எதிரான போராட்டத்தில் தென் மாகாணத்தில் மாத்திரம் சுமார் 5000 அல்லது 6000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இத்தகைய தியாகங்கள் பகிரங்கமாகப் பேசப்படுகிறதோ இல்லையோ இந்த உண்மையை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. 



முஸ்லிம்கள் இந்த நாட்டில் எதனையும் சுரண்டவில்லை இந்த நாட்டுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை துரோகமிழைக்கவில்லை. இந்த நாட்டுக்காக  எப்போதும் மகத்தான பங்களிப்புச் செய்திருக்கிறNhம். எல்லா வகையான பங்களிப்புக்களையும் செய்துள்ள நாம், ஒரு பங்களிப்பைச் செய்ய மறந்து விட்டோம். இந்த மார்க்கத்தை அவர்களுக்கு எத்திவைக்காமையே நாம் விட்ட தவறு. இந்த தீனுக்கு சான்று பகிர தவறி விட்டோம். கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களாகிய நாம் கதீஜாக்களையும் அபூ பக்ர்களையும் உமர்களையும் உஸ்மான்களையும் அலிகளையும் உருவாக்கி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அபூதாலிப்களையாவது நாம் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படையான கடமையை நாம் நிறைவேற்றத் தவறி விட்டோம். 



எனவே, அந்தப் பணியை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறNhம். எமக்குள்ளே பிளவுபட்டு,  அர்த்தமற்ற வீண் சர்ச்சைகளில் ஈடுபட்டு மார்க்கத்துக்கும் முஸ்லிம்களுக்கம் அபகீர்த்தி ஏற்படுத்தாமல் வாழ வேண்டும். 2 கோடி மக்கள் வாழும் இந்நாட்டில், நாம் இருபது இலட்சம் மட்டுமே. மிகுதி ஒரு கோடியே எண்பது இலட்சம் முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தின் தூதை, எத்தி வைக்கக் கடமைப்பட்டிருக்கிறNhம். இந்த அடிப்படையான கடமையை மறந்து விட்டு அர்த்தமற்ற வாதப்பிரதிவாதிகளிலும் வீண் குதர்க்கங்களிலும் ஈடுபடுகின்றபோது அல்லாஹ்வுடைய அருளையும் பரகத்தையும் இழப்போம்.



“அரபுத் தீபகற்பத்தில் இனியும் நான் வணங்கப்படப் போவதில்லை என்பதை ஷைதான் நன்கு அறிந்து கொண்டான். ஆனால், ஒரு விடயத்தில் மாத்திரம் அவன் நம்பிக்கை இழக்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறான். அதுதான் ‘அத்தஹ்னீஷ் பைனல் முஸ்லிமீன்’ முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவை, பிரச்சினையை ஏற்படுத்துவது என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.



எனவே, நாம் எமக்கு மத்தியில் நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் நாம் எமக்குள் ஐக்கியப்பட வேண்டும் ஒற்றுமை எனும் கயிற்றைப பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் முன்மாதிரி சமூகமாகத் திகழ வேண்டும். அடுத்த கட்டமாக மஸ்லிமல்லாதவர்களுக்கு இந்த மார்க்கத்தைச் சொல்ல வேண்டும்.  



அல்லாஹுத் தஆலா சொன்னதாக நபியவர்கள் சொல்கிறார்கள்.



“யார் எனது திருப்தியை நாடி பரஸ்பரம் அன்பு கொள்கிறாரோ அவருக்கு எனது அன்பு நிச்சியமாகி விட்டது. எனக்காக யார் பரஸ்பரம் பொறுத்துக் கொள்கிறாரோ அவருக்கும் எனது அன்பு நிச்சியமாகி விட்டது. எனக்காக யார் பரஸ்பரம் நட்புக் கொள்கிறாரோ அவருக்கும் எனது அன்பு நிச்சியமாகி விட்டது.”



முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்தளவு தூரம் நெருக்கமான அன்பும் பிணைப்பும் பரஸ்பரம் ஐக்கியமும் நிலவ வேண்டும் என்பதனை அற்புதமாகச் சொல்கிறது இந்த ஹதீஸுல் குத்ஸி. முஸ்லிம்கள் பிரிந்து, பிளவுபடக் கூடாது.



“தனித்திருக்கின்ற மனிதனோடு ஷைத்தான் இருக்கின்றான். இரண்டு முஸ்லிம்கள் சேர்ந்து விட்டால் ஷைதான் தூரமாகிறான்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். முஸ்லிம்கள் ஒற்றுமையடைகின்ற அளவுக்கு ஷைத்தான் எம்மை விட்டும் தூர விலகிச் செல்கிறான். 



“நீங்கள் ஒற்றுமையாக (ஜமாஅத்தாக) இருங்கள் பிளவையிட்டு நான் உங்களை எச்சரிக்கின்றேன்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி  வஸல்லம்) அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள். 



தினமும் ஐந்து தடவைகள் கூட்டாக நின்று தொழ வேண்டும் வாராந்தம் ஜுமுஆவுக்காக அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி தொழுகையை நிறைவேற்றி ஐக்கியத்தைப் பிரகடனப்படுத்த வேண்டும். வருடாந்தம் உலக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம்களின் ஐக்கியத்தைப் பறைசாற்ற வேண்டும் வேண்டும்.



கூட்டுத் தொழுகை, ஜுமுஆ, ஹஜ்... போன்ற வணக்க வழிபாடுகளின் பிரதான நோக்கம் முஸ்லிம்கள் ஒற்றுமைக் கடைபிடிக்க வேண்டுமென்பதே. இமாம் தொழுகையை நடத்தவதற்கு முன்னர் மஃமூம்களைப் பார்த்து “ஸப்புகளை இடைவெளியின்றி சீராக்கிக் கொள்ளுங்கள்  நெருக்கமாக இருங்கள்” எனச் கூறுகிறார். 



முஸ்லிம் சமூகம் உடல் ரீதியிலும் (Phலளiஉயட) ஒற்றுமையாக, நெருக்கமாக இருக்க வேண்டும் தொழுகைக்கான வரிசையில் ஏற்படுகின்ற கோணல் சமூகத்திலுள்ள கோணலைப் பிரதிபலிக்கிறது. எனவேதான் தொழுகைக்காக வரிசையாக நிற்கும்போதும் (ஸப்) இறுக்கமாக, நெருக்கமாக இருக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்தகிறது.



முஸ்லிம்கள் கூட்டாக இருக்கின்றபோதுதான் அல்லாஹ்வுடைய உதவி கிடைக்கிறது. முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரிந்து செல்பவர்களுக்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். 



“யார் முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு சாண் அளவு விலகிச் செல்கிறாரோ அவர் தன்னுடைய கழுத்தில் இருந்து இஸ்லாத்தின் வளையத்தைக் கழற்றி எறிந்தவராவார்.”



முஸ்லிம்கள் அன்பினால் பின்னிப் பிணைக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பரஸ்பரம் ஒருவைரை ஒருவர் வெறுக்காதீர்கள்  பொறாமை கொள்ளாதீர்கள்  ஒருவரைக் கண்டு அடுத்தவர் முகம் சுளிக்காதீர்கள். அல்லாஹ்வுடைய அடியார்களாக இருக்கின்ற நீங்கள் சகோதர்களாக இருங்கள் என்று நபியவர்கள் பணித்திருக்கிறார்கள். 



ஒரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “ஸுன்னத்தான நோன்புகளை விட, ஸுன்னத்தான தொழுகைகளை விட சிறந்த ஓர் அமலை சொல்லித் தரட்டுமா?” என ஸஹாபா தோழர்களைப் பார்த்துக் கேட்டடுவிட்டு “அதுதான் நீங்கள் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருப்பது” என்றார்கள்.



சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்டுவது எத்தகையதோர் உன்னத அமல் என்பதை சிந்தனை செய்து பாருங்கள். ஆனால், பலர் இதனைப் பொருட்படுத்துவதே இல்லை.



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் பிரதானமானது ஐங்காலத் தொழுகை. அதிலும் அஸர் தொழுகையின் முக்கியத்துவத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் வலியுறுத்தியுள்ளார்கள். “ஒருவருக்கு அஸர் தொழுகை தவறிப் போவது அவர் தனது வீடு, வாசல், உற்றார், உறவினர்கள், சொத்து, செல்வம் அனைத்தையும் இழப்பதற்கு சமமாகும் என்று நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். 



ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அஸர் தொழுகை நபியவர்களுக்கு தவறி விடுகிறது. ஒரு கோத்திரத்துக்குள்ளே ஏற்பட்ட ஒரு பிணக்கை, அவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பகைமையை நீக்கி அவர்களுக்க மத்தியில் சமாதானம் செய்து வைக்கும் முயற்சியில் நபியவர்கள் ஈடுபட்ட காரணத்தினால்தான் அவ்வேளை அஸர் தொழுகையை கழாவாகத் தொழுவதற்கு நபியவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 



இந்த மார்க்கம் எந்த அளவு தூரம் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது அதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.



எனவே, பெருநாள் தினம் என்பது எமது குடும்பத்தினரிடையே, சகோதர சகோதரிகளுக்கு மத்தியில், அண்டை அயலவர்களுக்கு மத்தியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப வேண்டிய நாள். எம்மைச் சூழ வாழ்கின்ற அனைவர் மத்தியிலும் சாந்தி சமாதானத்தை உருவாக்க வேண்டிய நாள். 


அனைவருக்கும் ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!



JazakAllah- Sheik agar muhamed

பெண் என்றால் இப்படி இருக்கணும்


(ஒவ்வொரு பெண்ணிற்கும் சமூக அக்கறையும் நிச்சயம் தேவை. சமுதாய நோக்கு கொண்ட பெண்ணாக நம் பெண் சமுதாயம் மாற வேண்டும்.)

நாம் அல்லது நமது நண்பர்கள் யாராவது ஒரு பெண்ணைப் பார்த்து பெண் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று சொல்லி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?

ஆம் என்றால் அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார்? அழகாக இருப்பதைக் கொண்டு சொல்வதை இங்கே தவிர்த்துவிடுங்கள். ஒரு சராசரி பெண் என்பவள், வீட்டில் மகாராணியாகவும், அலுவலகத்தில் ராணியாகவும் இருப்பாள். இதுமட்டும் அல்லாமல் பொது விஷயங்களிலும் சேவகியாகவும், தவறை தட்டிக் கேட்பவளாகவும் இருப்பாள். அவளது கடமையை செய்துவிட்டு, உரிமையைத் தட்டிக் கேட்கும் பெண்ணைத்தான் பெண் என்றால் இப்படி இருக்கணும் என்று

சொல்வார்கள்.
எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாமல், எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டு, நம்மைப் பற்றி நாமே உணராமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணை பெண் இனமே மதிக்காது. பிறகு எப்படி சமுதாயம் மதிக்கும்.

தன்னைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையுடன் வாழ்வதுதான் அடிப்படை. தனக்குள்ள திறமைகளைக் கொண்டு வாழ்வில் முன்னேறும் ஆவலுடனும், எதையும் மற்றவரை எதிர்பார்க்காமல் தானாக செய்யும் தன்னம்பிக்கையும் பெண்ணிற்கு நிச்சயம் வேண்டும்.

திருமணத்திற்கு முன்பு தந்தையின் தயவுடன் வாழும் பெண் திருமணத்திற்குப் பின் கணவரின் தயவுடனும், றகு மகனிடம் வாழ்வதும் ஒரு பெண் தனக்குத் தானே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடாகும்.

வீட்டு வேலையை மட்டும் செவ்வனே செய்து வந்தால் போதாது. நம் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் சந்திப்பது இந்த சமுதாயத்தைத்தான். எனவே ஒவ்வொரு பெண்ணிற்கும் சமூக அக்கறையும் நிச்சயம் தேவை.

ஒரு இடத்தில் தவறான காரியம் நடக்கிறது என்று தெரிந்தும் அதனை சும்மா விட்டுவிடுவதும், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்ப்பதும் சமுதாயத்தில் ஒரு அங்கமான பெண்ணிற்கு சரியெனப் படுமா?

தவறைத் தட்டிக் கேட்காமல் போனாலும், தகுந்த இடத்தில் அதைப் பற்றி புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம்.

ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தவரை தூக்கி விட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வருவதும் சமுதாய அக்கறை என்றே கூறலாம்.

பேருந்தில் வயதானவர்கள், குழந்தையுடன் அல்லது கர்ப்பிணி தாய்மார்கள் வந்தால் எழுந்து இருக்கை அளிப்பது, முதியவர்களுக்கு வேண்டிய உதவி செய்வது, வழி தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு வழிகாட்டுவது, சாலையில் கடக்க முயலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது, ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதி அளிப்பது போன்றவற்றை செய்யும் ஒரு சமுதாய நோக்கு கொண்ட பெண்ணாக நம் பெண் சமுதாயம் மாற வேண்டும்.

சிலர் வழி கேட்டால் கூட சொல்லாமல் போவார்கள். பேருந்தில் கர்ப்பிணிகளை அடித்துத் தள்ளிக் கொண்டு ஏறுவதும் சில பெண்கள்தான்.

கருணைக்கும், இரக்கத்திற்கும் எடுத்துக் காட்டாக கூறப்பட்ட பெண்கள் தற்போது, அதனை எடுத்துக் கூறும் அளவிற்கு மாறிவிட்டனர். ஆனால் இவை அனைத்தும் நிறைந்து, உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் தனது வேலையை செம்மையாக செய்யும் ஒரு பெண்ணைத்தான் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.

Jazakallah-குளோபல் இஸ்லாம்

கண்ணியத்திற்குரிய பெண்களே


கண்ணியத்திற்குரிய பெண் சகோதரிகளுக்கு உலமாக்கள் சொல்லக்கூடிய விடயம் தான் "கணவன் கோபமாக இருக்கிறார் என்று தெரிந்தால், நீங்கள் ஸாலிகான பெண் என்றால் அந்த நேரத்தில் நீங்கள் அவருடைய பேச்சுக்கு மறு பேச்சு பேச வேண்டாம். அமைதியாகிவிடுங்கள்!"

அழகான ஒரு சம்பவம்: ஒரு பெண் ஒரு உலமாவிடம் சென்று சொன்னாறாம், அடிக்கடி எனக்கும் என்ட கணவனுக்கும் இடைல பிரச்சினைகள் தான் வருது, இதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்கன்னு. அப்ப அந்த உலமா சில விபரங்களை கேட்டுவிட்டு சொன்னாறாம். நான் இந்த தண்ணில ஊதி தாரன்! நீங்க என்னசெய்யனும்னா உங்கட கணவர் உங்களோட கோபமா பேசுற நேரம் இந்த தண்ணில கொஞ்சம் எடுத்து விழுங்காம வாய்க்குள்ள வைத்துகொள்ளுங்க. எப்ப உன்குட கணவர் அமைதியாகுவாரோ அப்ப இத விழுங்கிடுங்க. இப்படியே கொஞ்ச நாளைக்கு செய்து வாங்க சரியாகிடும்னு. இப்ப இவ வீட்டுக்கு வந்து கணவன் கோபமா இருக்கிற நேரம் எல்லாம் உலமா சொன்ன மாதிரி செய்ற. இப்ப கொஞ்ச நாள்ல அவங்கட பிரச்சினை தீர்ந்துட்டது. கணவன் இப்ப இவகூட நல்ல இரக்கும். இப்ப அந்த பெண் உலமாகிட்ட போய் சொன்னாவாம். பிரச்சினை எல்லாம் இப்ப தீர்ந்துட்டது. அந்த தண்ணில நீங்க என்ன ஓதி தந்திங்கனு? உலமா சொன்னாறாம், நான் ஒண்டும் ஓதல்ல. உங்கட கணவன் கோபமா இருக்கிற நேரம் நீங்களும் பேச அவரும் பேச ஒரு நாளும் ஒற்றுமை உண்டாகிறது. பிரச்சினைதான் அதிகமாகும். அதுதான் அவர் கோபமாக இருக்கிற நேரம் நீங்க அமைதியாக இருக்கத்தான் அப்படி தண்ணிய வைத்திருக்க சொன்னன்னு சொன்னாறாம் :)

ஏனென்றால் பொதுவாக ஆண்கள் வெளியிடங்களுக்கு சென்று வரக்கூடியவர்கள். சில பிரச்சினைகளை, அழுத்தங்களை வெளியில் முகம்கொடுத்துவிட்டு வந்திருக்ககூடும். அந்த இறுக்கமான மனநிலையை வீட்டிலே சில நேரம் வெளிப்படுத்தக்கூடும். அந்த நேரம் பெண்களும் பேசுவார்கள் என்றிருந்தால் குடும்பத்துல பிரச்சினைகள் பெரிதாகுமே தவிர, ஒற்றுமை உண்டாகாது.

Jazakallah-Mohamed Nizzad

நவீன முஸ்லிமின் இஸ்லாம் !




ஒரு கதை சொல்வார்கள் ; நைட் கிளப் ஒன்றை முஸ்லிம் 
ஒருவன் நடாத்தி வந்தானாம் ! போதை வஸ்துக்கள் ,நிர்வாணப்
பெண்கள் இப்படி எதற்குமே பஞ்சமில்லையாம் !ஒரு முறை 
அவனது முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு 
சந்தேகத்துக்கிடமான தகவல் ஓன்று கிடைத்தது ;  
குறித்த  நைட் கிளப்பில் இறைச்சி வகையோடு பன்றி
இறைச்சியும் பரிமாறப்படுகின்றது ;என்பதுதான் !!
        கொதித்துப்போய்விட்டார்கள் அந்த முஸ்லிம் குடிமக்கள் !!!
இது விடையமாக கிளப் உரிமையாளரை கண்டு தமது பலத்த 
எதிர்ப்பை சொல்ல படையெடுத்து விடையத்தை 
உரிமையாளரிடம் முன்வைத்தபோது அவர் அதிர்ந்து போய் 
பின்வருமாறு பதில் கூறியுள்ளார் ; "அஸ்தஹுபிருல்லாஹ்"  
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அப்படியான ஹராமான 
வேலைகளை   நான் செய்வதில்லை " என்பதே அதுவாகும் !!!
இந்த சம்பவம் உண்மையோ பொய்யோ இதில் சிரிப்பை
 விட முஸ்லிமின் இன்றைய வாழ்வுச்சூழலை 
எடுத்துக்காட்டுகின்றது என்பதை வெட்கத்தை 
விட்டு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

ஹாஷிம் அம்லா


ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும் அனைவரையும் ஈர்த்துள்ளது. ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாக விளங்குகின்றார்,

மேலும் மது பரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர் நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரை அறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாக இருக்கின்றார் இஸ்லாத்தை தியரியாக வேய்த்துக்கொல்லாமல் தனது வாழ்வில் நடைமுறைப்படுத்தும் முஸ்லிம்களே இன்றைய காலத்தை வெல்லமுடியும். அல்லாஹ் இவரையும் எம்மையும் பொருந்திக்கொள்வானாக! 

குர்பானி



நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.
“எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.

வருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!” என்று கூறினார்.

வ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது,

ப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.

நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும்.

வருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம்.

பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்”. (37:101-108)

குர்பானியின் நோக்கம் இறையச்சம் என்பதைத்தவிர வேறில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள்; தெளிவு படுத்துகின்றன.

குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)
உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதன் அவசியத்தை மற்றுமொரு திருமறை வசனம் எடுத்துக் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்களைக் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது.

மது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக” (108:02)

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றி யுள்ளார்கள்.
“நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்புக் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளைத் தன் கரத்தால் அறுத்துப் பலியிட்டார்கள்”.
(அனஸ்(ரலி) – புகாரி, முஸ்லிம்)

இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரும் இக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும்வரை நகம், முடி ஆகியவைகளை நீக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்;
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பினால் துல் ஹஜ் மாதம் தலைப்பிறை முதல் அதனை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் என்பவற்றைக் களைவதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்.
(உம்மு ஸல்மா(ரலி), முஸ்லிம்)

குர்பானிப் பிராணிகள்:
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே அறுத்துப் பலியிட வேண்டும். இவை அல்லாத ஏனைய பிராணிகளை அறுத்துப் பலியிட்டால் “உழ்ஹிய்யா” நிறைவேறாது.

“ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம்) நாற்கால் பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்”. (22:34)
பிராணியின் வயதெல்லை :
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )

இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.
“முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸில் நபித்தோழர் “முஸின்னா”வை விட சிறந்த ஆறுமாதக்குட்டி உள்ளது என்ற கூற்று நபி(ஸல்) அவர்கள் “முஸின்னா”வைத்தான் குர்பானி கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. உமக்குத்தவிர வேறு எவருக்கும் இது அனுமதியில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் முஸின்னாவைத் தான் கொடுக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக விளக்குகின்றது.

அறுத்துப் பலியிடத் தகாதவைகள்:
1)வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
2) வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருடு
3) வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
4) மிகவும் மோசமாக மெலிந்திருத்தல் போன்ற குறைகள் இருத்தல் கூடாது. (திர்மிதி)

அறுத்துப் பலியிடும் நேரம்:
ஹஜ்ஜுப் பெருநாள் சூரியன் உதயமாகி, பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடித்தது முதல் அய்யாமுத் தஷ்ரீகின் கடைசி நாள் (துல்ஹஜ் மாதம் பதின்மூன்றாம் நாள்) வரை “உழ்ஹிய்யாவை” நிறைவேற்றலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அறுக்கப்படுவது உழ்ஹிய்யாவாகக் கணிக்கப்பட மாட்டாது.

“நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டுக் குர்பானி கொடுக்கின்றாரோ, அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவராவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ, அவர் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார்” என்று குறிப்பிட்டார்கள். (பரா(ரலி) – புகாரி)

குர்பானிப் பிராணிகளில் ஆணும், பெண்ணும்:
பெட்டை ஆடுகளையும், பசுக்களையும், கிடாய்களையும் முஸ்லிம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சிலபகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போன்று கருதுகின்றனர். சாதாரண நேரத்தில் பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள் குர்பானி கொடுப்பதற்கு பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர்.

இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.
உண்பதற்கு அனுமதிக்கப் பட்டவைகளில் கிடாயும், பெண்ணாடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும். பறவைகளில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர். குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானவை என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை; நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், “ஜத்உ” (கன்று) என்று ஆண் பாலில் கூறப்பட்டுள்ளது போன்றே, “ஜத்அத்” என்று பெண் பாலிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆண் கால்நடைகளைத்தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கூட்டுச் சேர்ந்து கொடுத்தல்:
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.
“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் முறை:
1) ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
2) ஒட்டகங்களை நிற்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
3) அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும். (புகாரி)

தாமே அறுப்பது நபிவழி:
உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும்.

நபியவர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

உழ்ஹிய்யா மாமிசத்தைப் பங்கிடல்:
“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தனது உழ்ஹிய்யாவிலிருந்து தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.

“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்: வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்”. (22:28)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“மாமிசத்தை நீங்களும் சாப்பிட்டுப் பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், உங்களுக்காகச் சேமித்தும் வையுங்கள்”. (புகாரி, முஸ்லிம், நஸாயி)

குர்பானி மாமிசத்தை காபிர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.
“(குர்பானிக்கான) ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக உங்களுக்கு நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை உண்டு. எனவே, (அது உரிய முறையில்) நிற்கும் போது அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள். அது தனது விலாப் புறங்களின் மீது சாய்ந்து விட்டால் அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவனுக்கும், யாசிப்பவனுக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறே அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தியுள்ளோம்”. (22:36)
இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும், யாசிப்பவர்கள் என்றும் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான். எனினும், ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்களின் பெருநாளாக இருப்பதால் அவர்கள் அன்றைய நாளில் பசியின்றி இருப்பது அவசியம். இந்த அடிப்படையில் தான் குர்பானி கொடுக்கப்படுகிறது. எனவே, முதலிடம் முஸ்லிம்களுக்குக் கொடுப்பது முக்கியமாகும். கூடுதலாக இருக்கும்போது காபிர்களுக்குக் கொடுத்தால் எந்தத் தவறுமில்லை.
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி:
மரணித்தவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பதற்குச் சரியான ஹதீஸ் எதுவும் காணக்கிடைக்கவில்லை. இதற்கு சிலரால் எடுத்துக் காட்டப்படும் ஆதாரம் சரியற்றதாகவும், பலவீனமாகவும் உள்ளது.

“ஆதமின் மகன் இறந்து விட்டால் மூன்று விடயங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. அவை, நிரந்தர தர்மம், பயன் தரும் கல்வி, தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல குழந்தை என்று” நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அபூஹுரைரா(ரலி) – முஸ்லிம்)

மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கும் வழி இந்து மூன்றும்தான். இது அல்லாத வேறு வழிகளில் நன்மை சேரும் என்றால் அதை நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும். குர்பானி விடயத்தில் நபி(ஸல்) அவர்கள் இறந்தவர்கள் சார்பாக குர்பானி கொடுக்கும் படி கூறவில்லை. ஸஹாபாக்களும் கொடுத்ததில்லை.
இறந்தவர்கள் சார்பாகக் குர்பான் கொடுக்கலாம் என்று கூறக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் ஹதீஸும் ஆதாரபூர்வமானது அல்ல.
அலி(ரலி) அவர்கள் இரண்டு ஆடுகளைக் குர்பானி கொடுத்தார்கள். ஒன்றைத் தனக்காகவும், இன்னொன்றை நபி(ஸல்) அவர்களுக்காகவும் கொடுத்தார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். எனவே, அதை ஒருபோதும் விடமாட்டேன் என்றார்கள்.
(ஹன்ஷ் – திர்மிதி, அபூதாவூத்)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஷரீக் இப்னு அப்துல்லாஹ், அபுல் ஹன்ஸா, ஹன்ஷ் இப்னு முஃதமர் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெறுவதால் இந்தச் செய்தி ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல.
குர்பானியின் மூலம் அல்லாஹ் எதிர்பார்ப்பது இறையச்சம் மட்டுமே! இந்த இறையச்சம் அவரவர் கொடுக்கும் போதுதான் வெளிப்படும். இறந்தவருக்காக நாம் கொடுப்பது அவரின் இறையச்சத்தை வெளிப்படுத்தாது.
எனவே, உழ்ஹிய்யா எனும் வழி முறையை நபிவழி பேணி நாமும் கொடுக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.!

Jazakallah-Islamkalvi